NALADIYAR TNPSC NOTES: நாலடியார் நூல்குறிப்பு: TNPSC EXAM PORTALவலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
NALADIYAR TNPSC NOTES: நாலடியார் நூல்குறிப்பு: நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’ என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.
வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.
திருக்குறளுக்கு அடுத்த நிலையில்வைத்துப் போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் நாலடியார். நூல் அமைப்பில் இரண்டிற்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. திருக்குறள் சூத்திரம் போன்று இரண்டு அடிகளில் கருதிய பொருளைச் சுருங்கச் சொல்லிவிளங்க வைக்கிறது;
நாலடியாரோ, பொருள்களைத்தக்க உதாரணம் காட்டி விளக்குவதோடு, கற்போர் உளம் கொளும்வகையில் தெளிவுபடவும் உரைக்கின்றது. இவ்வகையில் நாலடியாரைத் திருக்குறளின் விளக்கம் என்று கூறலாம்.
‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என வழங்கும் பழமொழியிலும், ‘பழகு தமிழ்ச்சொல் அருமை நால்இரண்டில்’ என உரைக்கும் தனிப்பாடல் பகுதியிலும் இந்த இரு அற நூல்களையும் ஒருசேர வைத்து எண்ணுதல் நோக்கத் தக்கது.
நான்கு அடி வெண்பாக்களால் இந்நூல் செய்யுட்கள் அமைந்திருத்தலின் இதனை ‘நாலடி’என்றும், ‘ஆர்’என்னும் சிறப்பு விகுதியை இறுதியில் இணைத்து, ‘நாலடியார்’ என்றும் வழங்கி வருகின்றனர்.
குறளைத் ‘திருக்குறள்’ என்று குறித்ததைப் போல,நாலடி வெண்பாக்களாலாகிய வேறு நூல்கள் பல தமிழில் இருக்கவும், இந் நூல் ஒன்றையே ‘நாலடி’ என்ற பெயரால்குறித்து வந்துள்ளனர்.
இந்நூலில் அமைந்துள்ள பாடல்தொகையை உட்கொண்டு, ‘நாலடி நானூறு’ என்றும் இதுகுறிக்கப் பெறுகின்றது. இதற்கு ‘வேளாண் வேதம்’ என்றஒரு பெயரும் உளதென்பது சில தனிப் பாடல்களால் தெரியவருகிறது.
இந்நூல், ஆசிரியர் ஒருவரால் இயற்றப்பெற்றது அன்று என்றும், பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாய் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர். இது பற்றிய கன்னபரம்பரைவரலாறு ஒன்றும் உள்ளது:
ஒரு சமயம் எண்ணாயிரவர்சமண முனிவர், பஞ்சத்தால் தம் நாடு விட்டு வந்து, பாண்டியன் ஆதரவில் வாழ்ந்து வந்தனராம். சில காலத்தில்தம் நாடு முன் போலச் செழிப்புறவே அவர்கள் மீண்டுசெல்ல விரும்பிய போது, பாண்டியன் அவர்களைப்பிரிய மனம் இன்றி, விடைகொடாது இருந்தனனாம்.
NALADIYAR TNPSC NOTES: நாலடியார் நூல்குறிப்பு: இதனால், எண்ணாயிரவரும் ஒவ்வொரு பாடல் எழுதித்தத்தம் இருக்கையின் கீழ் வைத்துவிட்டு, பாண்டியனிடம் அறிவியாமலே, தம் நாட்டுக்குத் திரும்பிவிட்டனராம்.
இச்செய்தி தெரிந்த மன்னன், புலவர்களைப் பிரிந்த மனத்துயராலும், தன் வாக்கை அவர்கள் மதியாமைபற்றி எழுந்த வெகுளியாலும், அவர்கள் எழுதிய எண்ணாயிரம் பாடல்களையும் வைகைப் பெருக்கில் எறியக் கட்டளைபிறப்பித்தானாம்.
அரசன் ஆணைப்படி வைகையில் எறிந்தஏடுகளில் நானூறு நீரை எதிர்த்து வரவே, பாண்டிய மன்னன் அவற்றைச் சிறந்தன என்று கொண்டு தொகுப்பித்துவைத்தானாம். இந்நிகழ்ச்சியைச் சில தனிப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
எண் பெரும் குன்றத்து எணாஅயிரம்இருடி
பண் பொருந்தப் பாடிய பா நானூறும்
என்றும் ஒரு தனிப்பாடலில் காண்கிறது.
இவ் வரலாறு எவ்வாறாயினும், நாலடியார்புலவர் பலர் பாடிய செய்யுட்களின் தொகுதி என்றே ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். கூறியது கூறலாகச்சில கருத்துகள் அங்கங்கே காணப்பெறுதலும் இதற்குத்தக்க சான்றுகளாம் என்பர்.
‘வெள்ளாண் மரபுக்கு வேதம்’ எனச்சான்றோர்
எல்லாரும் கூடி எடுத்துரைத்த, சொல்ஆரும்,
நாலடி நானூறும் நன்கு இனிதா என்மனத்தே
சீலமுடன் நிற்க, தெளிந்து
என்ற தனிப்பாடல் இந்நூலிலுள்ள பாக்கள் சான்றோர் பலர் பாடியவை என்னும் கருத்தைப் புலப்படுத்துகிறது. சீவக சிந்தாமணி உரையில் (1089). நச்சினார்க்கினியர், நாலடியார் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, ‘பிறரும் இச்சமயத்தார்.
ஆசிரியர் குறிப்பு
NALADIYAR TNPSC NOTES: நாலடியார் நூல்குறிப்பு: சமண முனிவர்கள்
பெயர்க்காரணம்
NALADIYAR TNPSC NOTES: நாலடியார் நூல்குறிப்பு: நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
நூற்குறிப்பு
NALADIYAR TNPSC NOTES: நாலடியார் நூல்குறிப்பு: நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள “ஒரே தொகை நூல்” நாலடியார் ஆகும்.
400 பாடல்கள், 40 அதிகாரங்கள்
சமண சமயம் சார்ந்தது
முத்தரையரை பற்றி கூறும் நூல்
அறக்கருத்துக்களைக் கூறுவதாகும்.
பா வகை – வெண்பா
இயற்றப்பட்ட காலம் – கி.பி.250 ஐ ஒட்டிய காலம்
உள்ளடக்கிய பொருள்வகை – அறம்
நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.
ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
முப்பெரும் அற நூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு
நாலடியாரில் முதல் இயல் = துறவறவியல்
நூலை தொகுத்தவர் = பதுமனார்
நூலை முப்பாலாக பகுத்தவர் = தருமர்
நூல் பகுப்பு
NALADIYAR TNPSC NOTES: நாலடியார் நூல்குறிப்பு: இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது