MISSION INDRA DHANUSH IN TAMIL
MISSION INDRA DHANUSH IN TAMIL: இந்திய அரசாங்கத்தின் ஆரோக்கியம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2014, டிசம்பர் 25 ஆம் நாள் தடுப்பூசிகள் திட்டத்தை கொண்டு வந்தது. 2009க்கும் 2013க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் விழுக்காடு 61 லிருந்து 65 ஆக, ஆண்டுக்கு ஒரு விழுக்காடு வளர்ச்சியையே காட்டியது.
ஒவ்வொரு ஆண்டும் 5% அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளுக்கு கூடுதலாக தடுப்பூசி தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்காக இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோக்கம்
MISSION INDRA DHANUSH IN TAMIL: வானவில்லின் ஏழு நிறங்களைக் குறிக்கும், இந்திரனின் கைஅம்பு என்ற பொருள் தரும், இந்திரதனுஷ் திட்டம் 2020 ஆம் ஆண்டிற்குள் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போட்டுவிடும் இலக்கை கொண்டுள்ளது.
கக்குவான், ரனஜன்னி, டெட்டனஸ், இளம்பிள்ளைவாதம், காசநோய், மீசல்ஸ், டீவகை மஞ்சள் காமாலை ஆகியவையை தடுக்ககூடிய 7 வகை நோய்களுக்கு அரைகுறையாக தடுப்பூசி போடப்படுபவர்களும் இந்தத் திட்டத்தின்படி அனைத்து தடுப்பூசிகளையும் பெறுவார்கள்.
அமலாக்கம்
MISSION INDRA DHANUSH IN TAMIL: தடுப்பூசிகள் போடப்படாமல் விடுபட்டுப் போயிருக்கும் குழந்தைகள் 7 வகை தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ளாமல் ஒரு சிலவற்றை மட்டுமே போட்டுக் கொண்டுள்ள குழந்தைகள் ஆகிய அனைவரையும் பிரசார வழிமுறையின் மூலம் ஊக்கமளித்து பற்றிக்கொள்வதற்கான திட்டவட்டமான ஒழுங்குமுறை கொண்ட, ஒரு முகப்படுத்தப்பட்ட செயல்திட்டம் தான் இந்திரதனுஷ் தடுப்பூசிதிட்டம்.
இந்தத் திட்டத்தின் முதல்கட்டம் 201 மாவட்டங்களில் அடுத்தடுத்த 4 மாதங்களுக்கு 2015 ஏப்ரல் 7 முதல் ஒருவாரகால தீவிர முகாம்களின் மூலம் செயல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
இவர்களில் 20 லட்சம் குழந்தைக்கு எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. 20 லடசத்திற்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் டெட்டனஸ், டாக்ஸாய்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டனர். அரசாங்கம், தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை தொடங்கி இருக்கிறது.
AYUSHMAN BHARAT HEALTH ACCOUNT IN TAMIL | ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்
தேர்ந்தெடுக்கப்பட்ட 352 மாவட்டங்களில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும். இவற்றில் 279 மாவட்டங்களில் நடுத்தரகவனம் தேவைப்படும் மாவட்டங்கள். மீதமுள்ள 73 மாவட்டங்கள் முதல் கட்டதடுப்பூசித் திட்டத்திலும் இடம் பெற்றிருந்த மாவட்டங்களாகும்.
இரண்டாவது கட்ட இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டத்தின் போது ஒவ்வொன்றும் ஒருவாரகால நீட்சியுடைய மக்களைத் திரட்டும் நான்கு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 2015 அக்டோபர் மாதம் முதல் இது நடைமுறைபடுத்தப்பட்டது.
உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் நிறுவனம், ரோட்டரி அமைப்பு, தானங்கள் தரும் மற்ற பங்காளர்கள் ஆகியோர் அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப ஆதரவைத் தருவார்கள். ஊடகங்கள் தனிநபர் இடைத் தொடர்புகள், தண்ணிய மேற்பார்வை உத்திகள், திட்டத்தின் செயல்பாடு குறித்த மதிப்பீடுகள் ஆகியவை இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்டத்தின் மிக முக்கயமான அங்கங்களாகும்.
கவனம் செலுத்தப்படும் பகுதிகள்
MISSION INDRA DHANUSH IN TAMIL: இந்திரதனுஷ் தடுப்பூசித்திட்டம் முதல் கட்டத்தில் 201 உயர் முன்னுரிமை மாவட்டங்களையும். இரண்டாம் கட்டத்தில் 297 மாவட்டங்களையும் இலக்காகக் கொண்டு 2015 ஆம் ஆண்டில் செயல்பட்டது.
இதில் தடுப்பூசிகளே போட்டிராத குழந்தைகளும் ஒருசில தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ள குழந்தைகளுமாக ஏறத்தாழ 50 % குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. 201 மாவட்டங்களில் 82 மாவட்டங்கள் உத்திரபிரதேசம், பிகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டுமே உள்ளன.
முற்றிலும் தடுப்பூசிகள் போடப்படாத குழந்தைகள், ஒருசில தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ள குழந்தைகள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். இத்தகைய ஒட்டு மொத்த இந்தியக் குழந்தைகளில் 25 மூபேர் இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்த 82 மாவட்டங்களில் வாழ்கின்றனர்.
MISSION INDRA DHANUSH IN ENGLISH
MISSION INDRA DHANUSH IN ENGLISH: The Ministry of Health and Family Welfare, Government of India came up with the Immunizations Scheme on 25th December 2014. Between 2009 and 2013, the percentage of people who had been vaccinated rose from 61 to 65, an increase of one percentage point per year.
The immunization program was accelerated with the aim of immunizing an additional 5% or more children each year. The Indradanush Vaccination Program has been undertaken to achieve the goal of vaccination for all by 2020.
Purpose
MISSION INDRA DHANUSH IN ENGLISH: Meaning the arrow of Indra, representing the seven colors of the rainbow, the Indradhanush project aims to vaccinate all unvaccinated children by 2020. Those who are semi-vaccinated against 7 preventable diseases like measles, mumps, tetanus, polio, tuberculosis, measles and yellow fever will also get all the vaccinations under this scheme.
Enforcement
MISSION INDRA DHANUSH IN ENGLISH: The Indradhanush Vaccination Program is a well-planned, targeted program to encourage and catch all children who are left unvaccinated, including those who have only received a few of the 7 vaccines, through a campaign.
The first phase of the program was implemented in 201 districts for a period of 4 months starting from 7th April 2015 through one-week intensive camps. More than 75 lakh children were vaccinated during this period. Of these, 20 lakh children have been given all the vaccines. More than 20 lakh pregnant women got tetanus and toxoid vaccines.
The government has started the second phase of the vaccination programme. The scheme will be implemented in 352 selected districts. Out of these 279 districts are medium focus districts. The remaining 73 districts were also included in the first phase of immunization.
During the second phase of the Indradanush vaccination programme, four special population mobilization campaigns of one-week duration each will be undertaken. It has been implemented since October 2015.
MISSION INDRA DHANUSH IN ENGLISH: WHO, UNICEF, Rotary Foundation and other donor partners will provide technical support to the Ministry. Media, people-to-people contacts, water monitoring strategies and evaluation of program performance are the most important components of the Indradanush Vaccination Programme.
Areas of focus
MISSION INDRA DHANUSH IN ENGLISH: 201 high priority districts in the first phase of Indradanush vaccination programme. The second phase was implemented in 2015 targeting all 297 districts. Approximately 50% of children were vaccinated, including unvaccinated children and some vaccinated children.
Out of 201 districts, 82 districts are in only four states namely Uttar Pradesh, Bihar, Madhya Pradesh and Rajasthan. India has a high number of children who are completely unvaccinated and only a few vaccinated. 25 out of these total Indian children live in 82 districts of these 4 states.