KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES 2023: கம்ப ராமாயணம் TNPSC பொது தமிழ் குறிப்புகள் 2023

Photo of author

By TNPSC EXAM PORTAL

KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES 2023: கம்ப ராமாயணம் TNPSC பொது தமிழ் குறிப்புகள் 2023: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES

ஆசிரியர் குறிப்பு

 • KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES: கம்பர் சோழ நாட்டு தேரழுந்தூரில் பிறந்தார். இவ்வூர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
 • கம்பரின் தந்தையார் ஆதித்தன். கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தார். இவரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரித்தார்.
 • கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. இவர் செய்நன்றி மறவாத இயல்பினர்.
 • தம்மை ஆதரித்த வள்ள சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல்வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்.
 • “சடகோபரந்தாரி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்” ஆகியன கம்பர் இயற்றிய பிறநூல்கள்.
 • ஏர் எழுபது, திருக்கை வழக்கம் இரண்டும் உழவு பற்றியது.
 • ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தார், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவர்கள்.
 • கம்பர் இறந்த ஊர் பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை.
 • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
 • தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
 • மகன் = அம்பிகாபதி
 • மகள் = காவிரி
 • விருத்தம் பாடுவதில் வல்லவர்
 • *கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் காடு போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்:
 • விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழ்பெற்றவர்;
 • கம்பரது காலம் 12ஆம் நூற்றாண்டு எழுதப்பட்ட காலம்தொட்டு மக்கள் இலக்கியமாகப் போற்றப்படுவதற்குக் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிநலமே காரணம்
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES

ஆசிரியரின் சிறப்பு பெயர்கள்

 • கவிப்பேரரசர்
 • கவிக்கோமான்
 • கம்பநாடுடைய வள்ளல்
 • கவிச்சக்ரவர்த்தி (நாதமுனிகள்)
 • சந்த வேந்தர்
 • தமிழரின் கவிதாமண்டலத்தை ஆண்டவன்
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES

கம்பர் இயற்றிய நூல்கள்

 • கம்பராமாயணம்
 • ஏர் எழுபது
 • சிலை எழுபது
 • சரஸ்வதி அந்தாதி
 • திருக்கை வழக்கம் (இரண்டாம் உழவு பற்றியது)
 • கம்பர் மகன் அம்பிகாபதி
 • சடகோபர் அந்தாதி (நம்மாழ்வார் பற்றியது)
 • கம்பராமாயணம்
 • அம்பிகாபதி எழுதியது அம்பிகாபதிக்கோவை
 • இராம நாடகக் கீர்த்தனை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்.

புகழுரைகள்

 • “கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”
 • “கம்பனைப் போல வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”- பாரதியார்
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
நூற்குறிப்பு
 • KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES: இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார்.
 • கம்பர் இயற்றிய இராமாயணம் கம்ப ராமாயணம் எனப்பட்டது. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார்.
 • கம்பனது கவிநலத்தின் காரணமாக இது “கம்பராமாயணம்” என்றே அழைக்கப்படுகிறது.
 • இராமாயணம் தமிழ் இதிகாசம் இரண்டனுள் ஒன்று மற்றும் முதலாவது.
 • இந்நூல் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது. காண்டம் என்பது பெரும் பிரிவையும், படலம் (118 படலம்) என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
 • “தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பினால் உச்சநிலை அடைந்தது”.
 • இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விருநூல்களையும் தமிழுக்கு கதி என்பர் பெரியோர். (7வது காண்டம் – உத்தரகாண்டம் – ஒட்டக்கூத்தர்)
 • கம்பராமாயணம் பெருங்காப்பித்திற்குரிய இலக்கணங்களை முழுமையாக பெற்றது. சொற்சுவையும், பொருட்சுவையும் தமிழ்ப்பண்பாடும் மிளிர்ந்துள்ளது
 • கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
 • கம்பராமாணயம் ஒரு வழி நூல்
 • வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் முதல் நூல்
 • காலம் 9 ஆம் நூற்றாண்டு (அ) 10 ஆம் நூற்றாண்டு என்பர்.
 • அரங்கேறிய இடம் – ஸ்ரீரங்கம்
 • வால்மீகி பாடாத, கம்பன் பாடியது (3) – மாயாசனகப் படலம், அங்கதன், சீதை படலம்
 • க. ரா. உரைநடையில் எழுதியவர் – தண்டபாணி சுவாமிகள்
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES

கம்பராமாயணம் – சிறப்பு பெயர்கள்

 • கம்பசித்திரம்
 • கம்பநாடகம்
 • தோமறுமாக்கதை
 • மானுடம் பாடும் காவியம்
 • இயற்கை பரிணாமம்
 • தமிழர் கவித்துவத்தின் பேரெல்லை
 • முற்காலக் காப்பியங்களை எல்லாம் தமிழுலகம் மறக்கச் செய்து தன்னிடத்திலே தமிழர் உள்ளதை தேக்கி வாய்த்த புகழ் உடையது = கம்பராமாயணம்
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
கம்பராமாயணம் நூல் அமைப்பு
 • காண்டம் = 6
 • படலம் = 118
 • மொத்த பாடல்கள் = 10589
 • யாப்பு வண்ணங்கள் = 96
 • முதல் படலம் = ஆற்றுப்படலம்
 • இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்
ஆறு காண்டங்கள்
 1. பாலகாண்டம்
 2. அயோத்தியா காண்டம்
 3. ஆரண்ய காண்டம்
 4. கிட்கிந்தா காண்டம்
 5. சுந்தர காண்டம்
 6. யுத்த காண்டம்
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
 1. பாலகாண்டம்
 • KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES: பாலகாண்டம் இராமாயணத்தின் முதலாவது காண்டம் ஆகும்.
 • இராவணனை அழிக்க திருமால் மனித அவதாரம் எடுப்பது பாலகாண்டம்.
 • தசரதன் – கோசலை தம்பதியினருக்கு இராமனாக திருமால் பிறக்கிறார்.
 • தசரதனுக்கும் கைகேயி மற்றும் சுமித்திரை ஆகியோருக்கும் இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறக்கின்றனர்.
 • தசரதனுடைய அரண்மனையில் வளர்ந்து வருகின்றனர்.
 • இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர், தன்னுடைய யாகத்திற்குக் காவலாக அழைத்துச் செல்கின்றார்.
 • விசுவாமித்திரரின் யாகத்தினை அழிக்க வந்த தாடகை எனும் அரக்கியை இராமன் கொல்கிறார்.
 • தாடகையைப் போல யாகத்தினை அழிக்க வந்த அரக்கர்களையும் இராமனும், இலக்குவனும் அழிக்கின்றனர்.
 • மிதிலைக்கு இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர் அழைத்துச் செல்கிறார்.
 • வழியில், கல்லாக இருந்த அகலிகை இராமனின் கால்தூசு பட்டு உயிர்பெறுகிறாள்.
 • அவளை கௌதம முனிவருடன் சேர்த்துவிட்டு மிதிலைக்குச் செல்கின்றனர்.
 • அங்கு சீதைக்கு சுயம்வரம் நடக்கிறது.
 • அதில் இராமன் கலந்து கொண்டு சிவதனுசை உடைத்து, சீதையை மணக்கிறார்.
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
 1. அயோத்தியா காண்டம்
 • KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES: அயோத்தியா காண்டம் இராமாயணத்தின் இரண்டாவது காண்டம் ஆகும்.
 • இராமன் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்தியாவிற்குச் செல்கிறார்.
 • உடன் இலக்குவனும், விசுவாமித்திரரும் செல்கின்றனர்.
 • அயோத்தியின் மன்னரான தசரதன் இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்கிறார்.
 • அதனை அறிந்த மக்களும், மந்திரிகளும் மகிழ்கின்றனர்.
 • மந்தரை எனும் கூனி பரதனின் தாயான கைகேயிடம் சென்று அவளுடைய மனதினை மாற்றுகிறாள்.
 • கைகேயி தசரதன் முன்பு தந்த இரண்டு வரங்களை இப்போதைய சூழ்நிலைக்குத் தக்கவாறு, இராமன் காடாளவும், பரதன் நாடாளவும் கேட்டுப் பெறுகிறாள்.
 • இராமனும், சீதையும் காட்டிற்கு செல்லுகையில், இலக்குவனும் உடன் செல்கிறான்.
 • மூவரும் காட்டிற்கு சென்று முனிவர்களையும், குகனையும் சந்திக்கின்றார்கள்.
 • குகனை தன்னுடைய மற்றொரு சகோதரன் என்று இராமன் பெருமையாக கூறுகிறார்.
 • தசரதன் இறந்து போனதால், இறுதிக் காரியங்களைச் செய்துவிட்டு பரதன் இராமனை காட்டில் வந்து சந்திக்கிறார்.
 • அயோத்திய அரசை ஏற்க இராமனிடம் வற்புறுத்துகிறார்.
 • ஆனால் இராமன் அதனை ஏற்க மறுக்கின்றார்.
 • பரதன் இராமன் மீண்டும் வந்து பொறுப்பு ஏற்கும் வரை இராமனின் பாதுகைகளை வைத்து அரசு செய்கிறான்.
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
 1. ஆரண்ய காண்டம்
 • KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES: இராமன் காட்டில் விராதன், சரபங்கன், அகத்தியர், சடாயு ஆகியோர்களைச் சந்திக்கிறார்.
 • அவர்களின் மூலமாக அரக்கர்களைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும் அறிந்து கொள்கிறார்.
 • இராவணனுடைய தங்கை சூர்ப்பணகை இராமனைக் கண்டு காதல் கொள்கிறாள்.
 • ஆனால் இராமன் ஏகப்பத்தினி விரதன் என்று பிற பெண்களை ஏற்காமல் இருக்கிறான்.
 • இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கினை அரிந்து அனுப்புகிறான்.
 • அதனால் இராவணனிடம் சென்று இராமனின் மனைவி சீதையைப் பற்றியும் அவளுடைய அழகினையும் கூறி, சீதையின் மீது மோகம் கொள்ள வைக்கிறாள்.
 • இராவணன் மாயமானை அனுப்பி இராமனையும், இலக்குவனையும் சீதையிடமிருந்து பிரித்து, சீதையைக் கவர்ந்து செல்கிறார்.
 • வழியில் சடாயு சீதையை மீட்கப் போராடி வீழ்கிறார்.
 • சீதையை இல்லத்தில் காணாது தேடி வரும் சகோதரர்களுக்கு இராவணனைப் பற்றிக் கூறிவிட்டு உயிர்விடுகிறார் சடாயு.
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
 1. கிட்கிந்தா காண்டம்
 • KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES: கிட்கிந்தா காண்டம் இராமாயணத்தின் நான்காவது காண்டம் ஆகும்.
 • சீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள்.
 • அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர்.
 • அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார்.
 • சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார்.
 • அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார்.
 • இராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள்.
 • அங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர்.
 • வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர்.
 • சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார்.
 • இலங்கைக்குச் செல்ல ஏற்றவர் அனுமன் என்று தீர்மானித்து அனுமனிடம் தெரிவிக்கின்றனர்.
 • அனுமனுக்கு அவருடைய பெருமையை உணர்த்தி அவர் இலங்கை செல்ல விஸ்வரூபம் எடுக்கிறார்.
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
 1. சுந்தர காண்டம்
 • KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES: சுந்தர காண்டம் இராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் ஆகும்.
 • கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம் சுந்தர காண்டம்.
 • அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்கிறது.
 • அனுமன் இலங்கைக்குச் செல்ல வான்வெளியில் பறந்து செல்கிறார். வழியில் எதிர்படும் தடைகளை இராம நாமம் கொண்டு வெற்றிபெற்று இலங்கையை அடைகிறார்.
 • அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை, அனுமார் சிறு குரங்கு வடிவில் சந்தித்து, இராமரின் கணையாழி மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, இராமதூதன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதுஇக்காண்டத்தில்தான்.
 • சீதையும் அந்த மோதிரத்தினைப் பெற்றுக் கொண்டு சூளாமணி எனும் அணியைத் தருகிறாள்.
 • இராவணனைச் சந்தித்து அனுமன் இராமனின் பெருமைகளைக் கூறி, சீதையை இராமனிடம் சேர்த்துவிடும்படி கூறுகிறார்.
 • ஆனால் இராவணன் அனுமன் வாலில் தீயிடுகிறான்.
 • அனுமன் இலங்கையையே எரித்துவிட்டு இராமனிடம் சென்று சீதையைக் கண்டதைக் கூறுகிறார்.
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
 1. யுத்த காண்டம்
 • KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES: யுத்த காண்டம் இதனை இலங்கை காண்டம் என்றும் அழைப்பர்.
 • இராமாயணத்தின் ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தில் இராமன் இலங்கையில் இராவணன் முதலான அரக்கர்களோடு நிகழ்த்திய போர் நிகழ்ச்சிகளைக் கூறும் பகுதி.
 • சீதையை காப்பற்றுவதும் இக்காண்டத்தில்தான்.
 • இராமன் இலங்கைக்கு பாலம் அமைத்து வானரப் படையுடன் சென்று, இராவணனுடன் போர் செய்கிறான்.
 • அப்போது இராவணனின் சகோதரன் வீடணன் இராமனுடன் இணைந்து கொள்கிறான்.
 • இராமன் இராவணனுடைய தம்பியான கும்பகருணன், மகன் இந்திரசித்து என அனைவரையும் போரிட்டுக் கொல்கிறார்.
 • இறுதியாக இராவணனைக் கொன்று வீடணனுக்கு இலங்கையைத் தந்துவிட்டு, சீதையை மீட்டு அயோத்திக்குச் செல்கிறார்.
 • அயோத்தியில் இராமருக்குப் பட்டாபிசேகம் நடைபெற்றது.
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
உத்தர காண்டம்
 • KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES: வால்மீகி எழுதிய இராமாயணம், யுத்த காண்டத்துடன் நிறைவுகிறது.
 • இராமர் – சீதையின் புதல்வர்களான லவன்-குசன் ஆகியவர்களின் வரலாற்றுச் செய்திகளை உத்தர காண்டம் கூறுகிறது.
 • இராமாயணத்தின் ஏழாவது காண்டமாகவும் கருதப்படுகிறது.
 • தமிழ் மொழியில் உத்தர காண்டம் எழுதியது ஒட்டக்கூத்தர்.

இராமனின் தம்பியர் மூவர்

 • பரதன்
 • இலக்குவன்
 • சத்ருக்கனன்

இராமனால் தம்பியராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மூவர்

 • குகன்
 • சுக்ரீவன்
 • வீடணன்
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES

வால்மீகியும் கம்பரும்

 • KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES: வால்மீகி ராமாயணத்தில் உள்ள பலவற்றைக் கம்பர் தம் காவியத்தில் அவ்வாறே தந்துள்ளார். சிலவற்றை விரித்துள்ளார். வால்மீகி சொல்லாதவற்றையும் தாமே படைத்துக் காட்டியுள்ளார்.
 • வால்மீகியின் உத்தரகாண்டத்தைக் கம்பர் தம் காவியத்தில் படைக்கவில்லை. தமிழ்ப் பண்பிற்கு இசையுமாறு மங்கல விழாவோடு முடித்தலே சிறப்பு என்று கருதி உத்தரகாண்டத்தை விட்டுவிட்டார் என எண்ணத் தோன்றுகிறது.
 • வாலியின் மகன் அங்கதனைப் பற்றி வால்மீகி சொல்லாத முறையில் சொல்லியுள்ளார். அங்கதன் அடைக்கலம் கம்பரின் புதிய படைப்பு. கம்பரின் மாயாசனகப் படலம் வால்மீகி நூலில் இல்லாதது.
 • வாலி இறந்த பிறகு அவனுடைய மனைவி தாரையைச் சுக்கிரீவன் தன் மனைவியாக்கிக் கொண்டான் என்பது வால்மீகி இராமாயணத்தில் உள்ள கதை. ஆனால் கமபர் தம் நூலில், கணவரை இழந்த பின் தாரை, மங்கல அணி துறந்து துயரமே வடிவாக விதவை வாழ்வு நடத்துவதாக காட்டியுள்ளார்.
 • வால்மீகி இராமாயணத்தில் இரணியன் பற்றிய விளக்கம் இல்லை. கம்பர் அதை தனிப்படலமாக எழுதியுள்ளார்.
 • சீதையும், இராமனும் திருமணத்திற்கு முன் கண்டு காதல் கொண்டதாக வால்மீக கூறவில்லை. கம்பர் அவர்களின் திருமணத்தை காதல் மணமாக அமைத்துக் காட்டியுள்ளார்.
 • மிதிலை நகரத் தெரு வழியே இராமன் நடந்தசென்ற போது கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதை அவனைக் கண்டாள் என்றும், இராமனும் அவனைக் கண்டாள் என்றும் கூறி அவர்களுக்குள் காதல் வளர்ந்து வந்தாக விளக்கியுள்ளார்.
 • இராவணன் சீதையை கைகளால் பற்றி தூக்கி சென்றதாக வால்மீகி கூறியுள்ளார். சீதையின் உயர்வுக்கு ஓர் இழுக்குபோல் அது தோன்றிய காரணத்தால், பஞ்சவடிவ பர்ண சாலையில் இருந்து சீதையை குடிசையோடு பெயர்த்து எடுத்து சென்று இலங்கையின் அசோகவனத்தில் சிறைவைத்தான் என்றும் அவளை தொடவில்லை என்றும் கம்பர் கூறியுள்ளார்.
 • கோசல நாட்டையும் வட நாட்டு மன்னர் பரம்பரையும் பாராட்டும் நூலாயினும் சோழநாடு மற்றும் தமிழ் மன்னர்களின் ஈடும் எடுப்புமற்ற பெருமித நிலையின் சாயலையே நாம் கம்பனின் இராமகதையில் காண்கிறோம்.
 • கம்பர் தம்முடைய நூலுக்கு இராமாவதாரம் என்றோ இராமகதை என்றோ பெயர் சூட்டியிருக்க வேண்டும் என்பதைச் சிறப்புப்பாயிரம் உணர்த்துகிறது. “காசில் கொற்றத்து இராமன் கதை” எனவும் “இராமாவதாரப் பேர்த்தொகை நிரம்பிய தோமறு மாக்கதை” எனவும் வரும் பாயிரப் பகதிகளால் இதை அறியலாம்.

பா வகை

 • கம்பர் தாம் பாடிய இராமாயணத்திற்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார்.
 • பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரையிலுள்ள ஆறு காண்டங்களையும் 118 படலங்களாகப் பகுத்து 10,589 விருத்தப்பாக்களால் பாடியுள்ளார்.
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES

நினைவில் கொள்க (Key Points to Remember)

 • முதற்படலம், ஆற்றுப்படலம் இறுதிப்படலம் விடை கொடுத்த படலம்.
 • தமிழின் மிகப் பெரிய நூல் கம்பராமாயணம்.
 • காப்பியத்தின் உச்சகட்ட வளர்ச்சி கம்பராமாயணம்.
 • திருமாலின் அவதாரம் இராமன்.
 • இராமனின் குலம் சூரிய குலம்.
 • தந்தை தசரதன், தாய் கோசலை (கௌசல்யா).
 • வளர்ப்புத்தாய் கைகேயி.
 • நாடு கோசலம்.
 • நகரம் அயோத்தி.
 • ஆசிரியர் வசிட்டர்.
 • கைகேயியின் தோழி கூனி.
 • கூனியின் இயற்பெயர் மந்தரை.
 • கைகேயியின் மனத்தை மாற்றியவள் கூனி.
 • இராமன் முதன் முதலாகக் கொன்றது தாடகை என்ற பெண்ணை..
 • விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்கும் பொருட்டு இராமன் தாடகையைக் கொன்றான்..
 • இராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்றவர் விசுவாமித்திரர்..
 • இராமன் – சீதை திருமணம் நடந்த இடம் மிதிலை.
 • சீதையின் தந்தை ஜனகன்.
 • சீதைக்கு ஜானகி, மைதிலி என்ற வேறுபெயர்களும் உண்டு.
 • பரதன் மனைவி மாண்டலி.
 • இலக்குவன் மனைவி ஊர்மிளா (ஜனகன் மகள்).
 • சத்ருக்னன் மனைவி சதகீர்த்தி (ஜனகன் மகள்).
 • இராவணன் மனைவி மண்டோதரி.
 • கும்பகருணன் மனைவி வச்சிரசுவாலை, தீர்க்க சுவாலை.
 • வீடணன் மனைவி சுரமை.
 • கைகேயியின் மகன் பரதன்.
 • சுமத்திரையின் மக்கள் இலக்குவன், சத்ருக்கனன்.
 • ஆதிசேடனின் அவதாரம் இலக்குவன்.
 • திருமணம் முடிந்து அயோத்தி வரும் வழியில் இராமனை எதிர்த்தவர் பரசுராமர்.
 • கங்கைக் கரையைக் கடக்க இராமனுக்கு உதவியவன் குகன்..
 • குகனின் தலைநகரம் சிருங்கிபேரம்.
 • கிஷ்கிந்தையை ஆண்டவன் வாலி.
 • வாலி மனைவி தாரை.
 • வாலி மகன் அங்கதன்.
 • வாலி தம்பி சுக்ரீவன்
 • வாலியைக் கொன்றவன் இராமன்.
 • சுக்ரீவன் அமைச்சன் அனுமான்.
 • இராமனுக்காகச் சீதையிடம் தூது சென்றவன் அனுமான்.
 • இராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன் அங்கதன்.
 • அங்கதன் தூது வால்மீகி இராமாயணத்தில் இல்லை.
 • இரண்யவதம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை.
 • வீடணன் மகள் திரிசடை.
 • இராவணன் மகன் இந்திரஜித்.
 • இந்திரஜித்தின் இயற்பெயர் மேகநாதன்.
 • இந்திரஜித்தின் அம்பால் மயங்கி விழுந்தவன் இலக்குவன்.
 • இந்திரஜித்தைக் கொன்றவன் இலக்குவன்.
 • 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து இந்திரஜித்தை இலக்குவன் கொன்றான்.
 • தேவ – அசுரப்போர் 18 வருடம் நடந்தது.
 • இராமாயணப் போர் 18 மாதம் நடந்தது.
 • மகாபாரதப் போர் 18 நாள் நடந்தது.
 • செங்குட்டுவனின் வடநாட்டுப் போர் 18 நாழிகை நடந்தது.
 • இராமன் முடிசூட்டிக் கொண்ட போது அரியணை தாங்கியவன் அனுமான்.
 • உடைவாள் ஏந்தியவன் அங்கதன்.
 • வெண்கொற்றைக் குடை பிடித்தவன் பரதன்.
 • கவரி வீசியவர்கள் இலக்குவன் சத்ருக்கனன்.
 • முடிஎடுத்துக் கொடுத்தவர் சடையப்ப வள்ளலின் முன்னோர் முடிசூட்டியவன் வசிட்டன்.
 • கம்பர் தம் ராமாயணத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்.
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES
KAMBA RAMAYANAM TNPSC POTHU TAMIL NOTES

பொதுவான குறிப்புகள்

 • கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
 • கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
 • கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
 • வான்மீகி எழுதாத “இரணியன் வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
 • கம்பராமாயணம் ஒரு வழி நூல்
 • கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
 • கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
 • கம்பராமாயணத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட விருத்தம் = கலி விருத்தம்
 • கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
 • இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
 • இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
 • 15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார் (10569 பாடல்கள்)
 • கம்பனுக்கு முன்பு இருந்த தமிழ் இராமாயணங்கள் = இராமாயண வெண்பா, சைன ராமாயணம்
 • கம்பராமாயணத்தோடு ஒப்பிடப்படும் உலகக் காப்பியம் = இலியட் (ஹோமர்)
 • உலக அரங்கில் தமிழுக்கு உயரிய மதிப்பைப் பெற்றுத் தந்த இலக்கியங்கள் = திருக்குறளும் கம்பராமாயணமும் ஆகும்
error: Content is protected !!