INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இனியவை நாற்பது – பூதஞ்சேத்தனார்
- INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: பாடல்கள் = 1 + 40 = 41
- பாவகை = வெண்பா
- உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
- இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
- இனிய 3 பொருள்கள் – 36
- இனிய 4 பொருள்கள் – 04
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பதுப் பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
- ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.
- பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.
- இவற்றுள், ‘ஊரும் கலிமா’ எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா.
- To Know More About – XIAOMI GAME TURBO APK
- ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது.
- இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன (1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன;
- இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.
கடவுள் வாழ்த்து
- INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.
ஆசிரியர் குறிப்பு
- INIYAVAI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: பெயர் – மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்
- ஊர் – மதுரை
- காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
- இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன்.
- இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.
- இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியுள்ளார்.
- ஆதலால் இவரின் சமயம் வைதீகமாகும்.
- இவர் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
- இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம்.
முக்கிய அடிகள்
- குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே
மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்
திருவும், தீர்வு இன்றேல், இனிது
- குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.
- சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது
- வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.
சொற்பொருள்
- குழவி – குழந்தை
- பிணி – நோய்
- கழறும் – பேசும்
- மயரி – மயக்கம்
- சலவர் – வஞ்சகம்
- மன்னுயிர் – நிலைபெற்ற உயிர்
- ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே
- தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது.
- ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
- மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது.
- வருவாய் அறிந்து வழங்கல் இனிது
- தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது.
- தடமெனத் பணைத் தோள் தளிர் இயலாரை
விடமென்று உணர்த்தல் இனிது
- மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.
- சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது
- சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று;
- சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும்.
கடவுள் வாழ்த்து
- கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது
அருஞ்சொற்பொருள்
- கண்மூன்றுடையான் – சிவபெருமான்
- துழாய்மாலையான் – திருமால் / பெருமாள்
- முகநான்குடையான் – பிரமன்
- ஏத்தல் – போற்றித்துதித்தல்