GRAINS WEBSITE IN TAMIL
GRAINS WEBSITE IN TAMIL: தமிழ்நாடு அரசு மூன்று முறை வேளாண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, சர்க்கரைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை போன்ற பல்வேறு துறைகளுக்கும் ஒவ்வொரு விதமான ஆவணங்களைத் தந்து விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
DIGITAL TN STRATEGY 2023 IN TAMIL: தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்
எனவே, பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் பலன்கள் யாவும் சரியான பயனாளிகளுக்கு எளிதாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு, க்ரெய்ன்ஸ் (GRAINS – Grower Online Registration of Agricultural Input System) எனும் வலைதளத்தினை வருவாய்-பேரிடர் மேலாண்மைத்துறையும், வேளாண்மை-உழவர் நலத்துறையும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையும் இணைந்து உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
க்ரெய்ன்ஸ் வலைதளம் என்றால் என்ன?
GRAINS WEBSITE IN TAMIL: விவசாயிகளின் தனிப்பட்ட விபரங்கள், சாகுபடி மேற்கொள்ளும் நில உடைமை விவரங்கள் விவசாயிகளிடமிருந்து சேகரித்து, வலைதளத்தில் பதிவேற்றப்படும்.
விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்த பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு மற்றும் சர்க்கரைத் துறை போன்ற 13-க்கும் மேற்பட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பலன்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதில் ஒரே தளத்தில் பெறும் வகையில் “க்ரெய்ன்ஸ்” வலைதளம் ஒற்றை சாளர வலைதளமாக (One Stop Solution) செயல்படுத்தப்படும்.
க்ரெயின்ஸ் தளத்தில் யார் யாருடைய விபரங்கள் பதிவேற்றப்படும்?
GRAINS WEBSITE IN TAMIL: GRAINS வலைதளத்தில் நில உடைமைதாரர்கள் மற்றும் சாகுபடியாளர்களின் விவரங்கள் பதிவேற்றப்படும்.
வலைதளப் பதிவிற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?
GRAINS WEBSITE IN TAMIL: ஆதார் அட்டை நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகத்தின் நகல், கைபேசி எண் போன்றவை தேவைப்படும்.
விவசாயிகள் என்னென்ன பலன்களைப் பெற முடியும்?
- ஒற்றைச் சாளர (Single Window Portal) வலைதளம் என்பதால், 13 துறைகளின் அனைத்துத் திட்டப் பயன்களுக்கும் விவசாயிகள் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- ஒவ்வொரு முறை விவசாயிகள் விண்ணப்பிக்கும் போதும் தனித்தனியாக ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
- விவசாயிகளே நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் திட்டப்பலன்களை பெற்றுக்கொள்ள இயலும்.
- நிதி உதவி வழங்கும் திட்டத்தில், ஆதார் எண் அடிப்படையில் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படுவதால், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
- இவ்வலைதளத்தில் நில உடைமைதாரர்கள் மட்டுமல்லாது குத்தகைதாரர்கள், சாகுபடியாளர்கள் விவசாயம் செய்யும் நில உடைமை விவரங்களும் சேகரிக்கப்படுவதால், திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி சாகுபடிப் பணியினை மேற்கொள்ளும் அனைத்து பயனாளிகளுக்கும் ஒன்றிய, மாநில அரசின் திட்ட பலன்கள் கிடைக்கும்.
நில உடைமைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை
GRAINS WEBSITE IN TAMIL: திட்டப்பலன்கள் உரிய பயனாளிக்கு சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் தான் இவ்வலைதளத்தில் விபரங்கள் யாவும் சேகரிக்கப்படுகின்றன.
இதனால் விவசாயிகளின் நில உடைமைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. வருவாய்த்துறை மூலம் பராமரிக்கப்படும் தமிழ்நிலம் இணையதளத்திலும், நில உரிமை ஆவணத்தின் அடிப்படையில் தான், நில உடைமைதாரர்களின் உரிமை உறுதி செய்யப்படுமே தவிர GRAINS-ல் இருக்கக்கூடிய விபரப்படி நில உரிமை கோர இயலாது.
எனவே, நிலச் சொந்தக்காரர்களான விவசாயிகள் யாரும் க்ரெய்ன்ஸ் வலைதளத்தில் பதிவு செய்வது குறித்து எந்தவிதமான தயக்கமும் கொள்ளத் தேவையில்லை.
எனவே, விவசாயிகள், சாகுபடியாளர்கள் அனைவரும் உடனடியாக உங்கள் கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரிடமோ அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரிடமோ தொடர்பு கொண்டு, மேற்கூறிய விவரங்களைத் தந்து, GRAINS வலைதளத்தில் தங்களை இணைத்திடுமாறு விவசாயிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
GRAINS WEBSITE IN ENGLISH
GRAINS WEBSITE IN ENGLISH: The Tamil Nadu government has presented three separate financial statements for agriculture and has been implementing various schemes for the welfare of farmers for the past two years.
In order to get the benefits of the schemes implemented by the government, it is necessary to give and apply various documents to various departments like agriculture, horticulture, agricultural engineering, agricultural marketing, sugar department, Tamil Nadu Agricultural University, revenue department, cooperative department etc.
Therefore, with the aim that all the benefits of the government schemes implemented by various departments should reach the right beneficiaries easily, the Government, to develop a website called GRAINS (Grower Online Registration of Agricultural Input System) together with the Department of Revenue and Disaster Management, Department of Agriculture and Farmers Welfare and Tamil Nadu E-Governance Agency. Action is being taken.
What is Crain’s website?
GRAINS WEBSITE IN ENGLISH: The personal details of the farmers, the land ownership details of the cultivation will be collected from the farmers and uploaded on the website. After uploading all the details, revenue and disaster management, agriculture, horticulture, agricultural engineering, agricultural marketing and agribusiness, seed certification, cooperatives, sericulture.
“Crain’s” website will be implemented as a single window website (One Stop Solution) so that farmers can easily get all the benefits of the scheme through more than 13 departments like food supply, rural development, animal husbandry and sugar sector.
What benefits can farmers get?
- Being a single window portal, farmers can register for all the scheme benefits of 13 departments at one place and get government assistance.
- Farmers do not need to submit separate documents each time they apply.
- Farmers can directly register on the website and get the benefits of the scheme on a priority basis.
- In the financial assistance scheme, transparency is ensured as money is transferred directly to the bank account based on Aadhaar number.
- As the details of land ownership of not only land owners but also tenants and cultivators are collected on this website, all the beneficiaries who carry out cultivation work according to the plan guidelines will get the benefits of the scheme of the Union and State Government.
Land ownership is not affected
GRAINS WEBSITE IN ENGLISH: All information is collected on this website on the basis that the benefits of the scheme should go to the rightful beneficiary. This will not affect the land ownership of the farmers.
Even on the Tamil Nilam website maintained by the Revenue Department, only on the basis of the land title document, the right of the landowners can be confirmed, but it is not possible to claim the land title as per the information available in GRAINS. So, no landowner farmers need to feel any hesitation about registering on Crain’s website.
Therefore, all the farmers and cultivators are requested to immediately contact your Village Administrative Officer or Assistant Agriculture Officer or Assistant Horticulture Officer and provide the above details and link themselves on the GRAINS website.