GI TAG FOR SALEM JAVARISI 2023: சேலம் ஜவ்வரிசிக்கு கிடைத்தது புவிசார் குறியீடு

Photo of author

By TNPSC EXAM PORTAL

GI TAG FOR SALEM JAVARISI 2023: புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்தன்மையுடன் பாரம்பரியமாகத் விளைவிக்க அல்லது தயாரிக்கப்படும் உணவு வகைகளுக்கு அதன் தரத்தைப் பாதுகாக்கும் விதமாக வழங்கப்படும் சான்று. இந்த புவிசார் குறியீடு பெரும் பொருள், ஒரு மாநிலத்தின் தனித்துவம் பெற்ற சிறப்புமிக்கதாக இருக்கும்.

இதே போன்ற தனித்துவம் பெற்றக் காரணிகளின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும், மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பூட்டுக்கும், காரைக்குடி கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாக்கும் மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக, மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் பொருட்களின் விற்பனைக்காக 1981ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொழிற்கூட்டுறவு சங்கமாகும். சேலம் சேகோசர்வில் 2.17 லட்சம் மூட்டைகள் அடுக்கும் வசதியுள்ளது.

GI TAG FOR SALEM JAVARISI 2023: மின்னணு ஏலவசதி, உறுப்பினர்களுக்கு கடன்வசதி, சந்தை வாய்ப்பு வசதி, ஆய்வக வசதி ஆகியவை ஏற்படுத்தி தரப்படுகிறது. 2022-23ம் ஆண்டு மட்டும் ₹4 கோடியே 20 லட்சத்து 12 ஆயிரம் நிகர லாபம் ஈட்டியுள்ளது. ஜவ்வரிசி பாரம்பரியமிக்க ஒரு உணவு பொருளாகும்.

ஒரு மாநிலத்தில் உள்ள பாரம்பரியமிக்க பொருளுக்கு, புவிசார் குறியீடு பெறுவது மிகவும் பெருமைப்படக்கூடிய அம்சமாகும். உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் சேலம் சேகோ நிலம் என அறியப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் 90 சதவீதம் ஜவ்வரிசி, மரவள்ளிக்கிழங்கிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சுமார் 60 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

GI TAG FOR SALEM JAVARISI 2023 / சேலம் ஜவ்வரிசிக்கு கிடைத்தது புவிசார் குறியீடு

GI TAG FOR SALEM JAVARISI 2023: தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்பட அண்டை மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகமாக உள்ள நிலையில், இங்கு மரவள்ளிக் கிழங்கு மாவில் இருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு உற்பத்தியும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.

சேலம் சேகோஸ் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் கூட்டுறவு சங்கமாகும். இந்த சேகோ சர்வில் 374 உறுப்பினர்கள் உள்ளனர். நாட்டிலேயே ஜவ்வரிசிக்கு என்று ஒரே ஒரு விற்பனை கேந்திரமாக சேகோ சர்வ் சங்கம் செயல்பட்டு வருகிறது.

ஜவ்வரிசியானது வடமாநில மக்களால் புனிதமிக்க உணவு பொருளாக கருதப்படுகிறது. இந்த ஜவ்வரிசி பெரும்பாலும் மிகமுக்கியமான நவராத்திரி, துர்கா பூஜா போன்ற திருவிழா காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் சேகோவுக்கான புவியியல் குறியீடு சான்றிதழ் உணவுப் பொருள் வகைப்பாட்டு பிரிவு 30ன் கீழ் பெறப்பட்டுள்ளது.

RTE SCHEME IN DETAILS 2023: அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை

அதன்படி, பாரம்பரியமிக்க ஜவ்வரிசிக்கு சேலம் சேகோ (ஜவ்வரிசி) என்ற பெயரில் புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. தற்போது, சேலம் சேகோ (ஜவ்வரிசி) என்ற புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் பெறும் விழா சேகோ சர்வ் சங்கத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் கண்காணிப்பு அலுவலர் சஞ்சய் காந்தி புவிசார் குறியீடு சான்றிதழை வழங்கினார்.

GI TAG FOR SALEM JAVARISI 2023: சேலம் ஜவ்வரிசிக்கு கிடைத்தது புவிசார் குறியீடு
GI TAG FOR SALEM JAVARISI 2023: சேலம் ஜவ்வரிசிக்கு கிடைத்தது புவிசார் குறியீடு

ENGLISH

GI TAG FOR SALEM JAVARISI 2023: A Geographical Indication is a certification given to food traditionally grown or produced in a specific area to protect its quality. This geocode has great meaning and is unique to a state.

On the basis of similar distinguishing factors, mountain pundu grown in the Kodaikanal hill region of Dindigul district has been assigned a geocode. Following this, Dindigul Phut, Karaikudi Kandangi Salei and Srivilliputhur Balkowa have received the Central Government Geocode.

First in India, a co-operative society started in 1981 for sale of cassava to maize and starch products. Salem Segoserve has storage capacity of 2.17 lakh bags.

GI TAG FOR SALEM JAVARISI 2023: Electronic auction facility, credit facility for members, market opportunity facility, laboratory facility are provided. In the year 2022-23 alone, it has earned a net profit of ₹ 4 crore 20 lakh 12 thousand. Sorghum is a traditional food item.

For a heritage item in a state, getting a geocode is a point of pride. Not only locally but internationally, Salem is known as the land of Sago. In Tamil Nadu alone, 90 percent of maize is produced from cassava. At present, around 60 products in Tamil Nadu have received Geocode.

Geocode for Salem Javarisi

GI TAG FOR SALEM JAVARISI 2023: While cassava cultivation is high in the neighboring districts of Salem and Namakkal in Tamil Nadu, the production of maize and starch flour from cassava flour is also carried out.

Salem Segos is the largest industrial co-operative society in South Asia. There are 374 members in this Sego server. Sego Serve Association is functioning as the only sales center for Javvarisi in the country.

Sorghum is considered a sacred food item by the northerners. This Javvarisi is mostly used during the most important festivals like Navratri and Durga Puja. In this case, the Geographical Code Certificate for Salem Sago has been obtained under Food Classification Section 30.

Accordingly, the attempt to get a geographical code for the traditional Javvarisi in the name of Salem Seko (Jawvarisi) has been successful. Currently, Salem Sego (Jawvarisi) geocode is available.

The certification ceremony was held at Sego Serve Society. In a ceremony presided over by District Collector Karmegam, Tamil Nadu Government Geocode Registered Products Monitoring Officer Sanjay Gandhi presented the Geocode certificate.

error: Content is protected !!