COOP BAZAAR MOBILE APP: கூட்டுறவு சந்தை செல்போன் செயலி

Photo of author

By TNPSC EXAM PORTAL

COOP BAZAAR MOBILE APP: கூட்டுறவு சந்தை செல்போன் செயலி: கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் ஏதுவாக தற்போது ‘கூட்டுறவு சந்தை’ எனும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

KALAIGNAR MAHALIR URIMAI THITTAM: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

கூட்டுறவு சங்கங்கள் மூலம்உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கடைகளுக்கு வந்துதான் வாங்கவேண்டும் என்கிற நிலையை மாற்றி, நுகர்வோர் எளிதாக அவர்களது இல்லங்களில் இருந்தே பொருட்களை பெறுகின்ற வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 8 சங்கங்களின் உற்பத்திபொருட்கள் இதில் சந்தைப்படுத்தப்பட உள்ளன.
இச்செயலியில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தயாரித்த 44 வகையான மளிகை பொருட்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் 20 வகையான உயர்தர நுண்ணூட்டச் சத்துகள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் என மொத்தம் 64பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

ENGLISH

COOP BAZAAR MOBILE APP: கூட்டுறவு சந்தை செல்போன் செயலி: A cell phone application called ‘Cooperative Market’ has been developed to make the products produced by cooperatives easy to market and easily available to the public. This program was launched yesterday by Minister of Cooperatives KR Periyakaruppan at the Chennai Chief Secretariat.

This process has been developed in such a way that the consumers can easily get the products from their homes, changing the situation of having to come to the shops to buy the products produced by the cooperative societies. In the first phase, the products of 8 societies are to be marketed in it.

A total of 64 products such as 44 types of grocery products produced by cooperative marketing societies, 20 types of high quality micronutrients, biofertilizers, biopesticides and water soluble fertilizers from Tamil Nadu Cooperative Marketing Network have been marketed in this process.

error: Content is protected !!