Change and Continuity in the Socio Cultural History of India TNPSC test

Photo of author

By TNPSC EXAM PORTAL

Change and Continuity in the Socio Cultural History of India TNPSC test

இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்

 

  1. “Culture is the instrument created by man to satisfy his needs and desires”. This was said by

a) Adamson Opal

b) Voltaire

c) C.C.North

d) E.P.Taylor

‘மனிதன் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவியே பண்பாடு’ எனக் கூறியவர்

a) ஆடம்சன் ஓபல்

b) வால்டேர்

c) சி.சி.நார்த்

d) ஈ.பி.டெய்லர்

Answer: c

 

  1. Read the following statement and its explanation and select the correct answer

Statement: There is a saying ‘If the sugarcane is in a bundle, the ant will do nothing’

Explanation: No one can separate those who live in harmony.

 

A) The Statement is correct and the explanation is false.

B) The statement is false and the explanation is wrong.

C) The statement is correct and The explanation is correct.

D) The statement is correct. explanation is insufficient

 

கீழ்க்காணும் கூற்றையும் அதற்குரிய விளக்கத்தையும் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க

கூற்று : ‘கரும்பு கட்டோடு இருந்தால், எறும்பு ஒன்றும் செய்யாது’ என்பது, நாட்டுப்புறத்தில் வழங்கும் ஒரு பழமொழியாகும்.

விளக்கம் : ஒற்றுமையுடன் வாழ்பவர்களை யாராலும் பிரிக்கமுடியாது.

 

a) கூற்று சரி, விளக்கம் தவறு

b) கூற்று தவறு, விளக்கமும் தவறு

c) கூற்று சரி, விளக்கமும் சரி

d) கூற்று சரி, விளக்கம் போதுமானதன்று

Answer: c

 

  1. Compiled Books by Manu, Yajnavalkir and others

a) Scriptures

b) Upanishads

c) Dharma sastras

d) Aranyas

மனு, யஜ்னவால்சியர் உள்ளிட்டோர் எழுதிய தொகுப்பு நூல்கள்

a) வேதநூல்கள்

b) உபநிடதங்கள்

c) தரும சாத்திரங்கள்

d) ஆரண்யகங்கள்

Answer: c

 

  1. “Folklore is the remnants of ancient culture” this was said by

a) Su. Sakthivel

b) William John Thomas

c) Ruth Benedict 

d) Malinosuki

“பழங்காலப் பண்பாட்டின் எச்சம், நாட்டுப்புறவியல்” என்று கூறியவர்

a) சு.சக்திவேல்

b) வில்லியம் ஜான் தாமசு

c) ரூத் பெனிடிக்ட்

d) மாலினோசுக்கி

Answer: b

 

  1. Select the answer that is appropriate

A) Stories – 1. Ammanai

B) Pamarar Song – 2. Porul marabilla poimmoli

C) Storybook – 3. Pannathi

D) Folklore – 4. pici

சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க

A) விடுகதை – 1. அம்மானை

B) பாமரர் பாடல் – 2. பொருள் மரபில்லாப் பொய்மொழி

C) கதைப்பாடல் – 3. பண்ணத்தி

D) நாட்டுப்புறக்கதை – 4. பிசி 

 A B C D

a) 1 2 3 4

b) 4 3 2 1

c) 2 1 4 3 

d) 4 3 1 2 

Answer: d

 

  1. Which of the following do not match ?

 

  1. Sabha – Elders assembly
  2. Samidhi – Religious Discussion Assembly
  3. Vidhatha – People Representatives Assembly
  4. Senani – Prince

 

a) 1 is correct

b) 1,2,4 is correct

c) 2,4 is correct

d) 2,3,4 is correct

கீழ்காண்பனவற்றில் பொருந்தாத இணையைக் கண்டறிக.

 

  1. சபா – மூத்தோர் அவை
  2. சமிதி – சமய விவாத அவை
  3. விதாதா – மக்கள் பிரதிநிதிகளின் அவை
  4. சேனானி – இளவரசர்

 

a) 1மட்டும் சரி

b) 1,2,4 சரி

c) 2,4 சரி

d) 2,3,4 சரி

Answer: a

 

  1. “Kanchi city’s education had no boundaries” this was said by

a) Thirunavukarasar

b) Thirugnanasambandar

c) Sundarar

d) Vallalar

‘கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர்’ என்று கூறியவர்

a) திருநாவுக்கரசர்

b) திருஞானசம்பந்தர்

c) சுந்தரர்

d) வள்ளலார்

Answer: a

 

8.What is considered to be the “Rootstock” of Indian culture

a) Art

b) Spirituality

c) Yoga

d) Medicine

இந்தியப் பண்பாட்டின் ‘ஆணிவேர்’ எனக் குறிப்பிடப்படுவது

a) கலை

b) ஆன்மீகம்

c) யோகா

d) மருத்துவம்

Answer: b

 

  1. Choose the right option in the Blanks provided

Sarahar – Sarahasamhitha

Susratha – Susrathasamhitha

Agni vesar – Agnivesa thanthra

Vahpathar – ——-

 

a) Ayurveda

b) Ashtangahiruthaya

c) Rasavadhamurai 

d) Unani

 

விடுபட்ட இடத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

சரகர் – சரகசம்ஹிதா

சுசுருதர் – சுசுருதசம்ஹிதா

அக்னிவேசர் – அக்னிவேச தந்திரா

வாக்பட்டர் – ———-

 

a) ஆயுர்வேதம்

b) அஷ்டாங்கஹிருதயா

c) இரசவாதமுறை

d) யுனானி

Answer: b

 

  1. Read the Statement and Reason and choose the appropriate answer

Statement : Panchamuga Vathiyam is named so because Panch means five.

Reason : This pot shaped instrument has five closed mouths

a) Statement is correct, Reason is insufficient

b) Statement, Reason both are wrong

c) Statement, Reason both are correct

d) Statement correct and Reason incorrect

பின்வரும் கூற்றையும் காரணத்தையும் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க

கூற்று: பஞ்சமுக வாத்தியம் என்பது, காரணப்பெயராக அமைந்துள்ளது. ‘பஞ்ச’ என்றால் ஐந்து என்பது பொருள்.

காரணம் : குடம் வடிவத்திலுள்ள இவ்வாத்தியத்தில் மூடப்பட்ட ஐந்து வாய்கள் இருக்கும்.

a) கூற்று சரி, காரணம் போதுமானதன்று

b) கூற்று, காரணம் இரண்டுமே தவறு

c) கூற்று, காரணம் இரண்டுமே சரி

d) கூற்று சரி, காரணம் தவறு

Answer: c

 

  1. Choose the person who was expert in Mathematics and Astronomy

Aryabhatta

Varahamihira

Brahmagupta

Bhaskara

 

a) 1,2,3 is correct 

b) 2,3,4 is correct

c) 1,3,4 is correct 

d) 1,2,4 is correct

 

வானவியலிலும் கணிதத்திலும் சிறந்து விளங்கியவர்களைத் தேர்ந்தெடுக்க

  1. ஆரியபட்டர்
  2. வராகமிகிரர்
  3. பிரம்மகுப்தர் 
  4. பாஸ்கரர்

 

a) 1,2,3 சரியானவை 

b) 2,3,4 சரியானவை

c) 1,3,4 சரியானவை 

d) 1,2,4 சரியானவை

 

Answer: c

 

  1. Match the correct answer

A) Kathakali – 1.Kerala

B) Yakshaganam – 2.Bihar

C) Kuchipudi – 3.Karnataka

D) Pithasiyam – 4.Andhra

 

சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க

A) கதகளி – 1. கேரளா

B) யக்ஷகானம் – 2. பீகார்

C) குச்சிப்புடி – 3.கர்நாடகா

D) பிதஸியம் – 4. ஆந்திரா

 

 A B C D

a) 1 2 3 4 

b) 2 3 4 1

c) 4 1 2 3

d) 1 3 4 2

 

Answer: d

 

  1. Match the following 

A) Sir C.V. Raman – 1.Mathematics

B) Ravindranath Tagore – 2. Economics

C) Amartyasen – 3. Literature

D) Srinivasa Ramanujam – 4. Science

 

பொருத்துக

A) சர்.சி.வி. இராமன் – 1.கணிதம்

B) இரவீந்திரநாத் தாகூர் – 2. பொருளாதாரம்

C) அமர்த்தியாசென் – 3. இலக்கியம்

D) சீனிவாச இராமானுஜம் – 4. அறிவியல்

 

 A B C D

a) 1 2 3 4 

b) 2 1 4 3

c) 4 3 2 1

d) 3 4 1 2

 

Answer: c

 

  1. ‘Religo’ is a word obtained from which language

a) Greek

b) Latin

c) English

d) North

‘Religo’ என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்

a) கிரேக்கம்

b) இலத்தீன்

c) ஆங்கிலம்

d) வடமொழி

 

Answer: b

 

  1. According to the saivite religious doctrine ‘pasu’ means

a) Body

b) Karma

c) Life

d) Maya

 

சைவசமயத் தத்துவத்தின்படி ‘பசு’ என்பது, இதனைக் குறிக்கும்

a) உடல்

b) கர்மா

c) உயிர்

d) மாயை

 

Answer: c

 

  1. Study the statement and explanation and answer the questions belows

Statement : ‘Athvaitha’ does not mean two but one.

Explanation : Athvaitham stresses the fact that Brahma and Soul are not two but one.

 

a) Statement is correct, Explanation is incorrect

b) Statement and Explanation both are correct

c) Statement is incorrect and Explanation is correct

d) Statement and Explanation both are incorrect

 

கீழ்க்காணும் கூற்றையும் அதன் விளக்கத்தையும் படித்துச் சரியான விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க

கூற்று : ‘அத்வைதம்’ என்பதற்கு இரண்டு அல்ல, ஒன்றே என்பது பொருள்.

விளக்கம் : பிரம்மமும் ஆன்மாவும் இரண்டல்ல, அவை ஒன்றே என்பதை அத்வைதம் வலியுறுத்துகிறது.

 

a) கூற்று சரி, விளக்கம் தவறு

b) கூற்று , விளக்கம் இரண்டும் சரியானவை

c) கூற்று தவறு, விளக்கம் சரி

d) கூற்று விளக்கம் , இரண்டும் தவறானவை

 

Answer: b

 

  1. Choose the option does not match

 Religion – Worshipped god

a) Kanabathyam – Ganapathy

b) Kaumaram – Moon

c) Saktham – Shakthi 

d) Sauram – Sun

 

பொருந்தாத இணையைச் சுட்டிக்காட்டுக.

சமயம் – வழிபட்ட கடவுள் 

a) காணாபத்யம் – கணபதி

b) கௌமாரம் – சந்திரன்

c) சாக்தம் – சக்தி

d) சௌரம் – சூரியன்

Answer: b

 

  1. Which of the following do not match with Mahayanam

a) Idol worship of Buddha is present

b) Ascetic life is not forced

c) Pall language was given importance

d) They believed in the presence of soul

பின்வருவனவற்றுள் மகாயானத்திற்குப் பொருந்தாத கூற்றைக் கண்டறிக.

a) புத்தருக்கு உருவ வழிபாடு உண்டு

b) துறவறம் வலியுறுத்தப்படவில்லை

c) பாலி மொழிக்கு முதன்மை அளிக்கப்பட்டது.

d) ஆன்மா உண்டு என நம்புகிறது.

Answer: c

 

  1. The Queen of Mantras is

a) Gayathri Mantram 

b) Yajur Veda Mantram

c) Upanidathas

d) Samhithas

 

மந்திரங்களின் அரசி எனப்படுவது

a) காயத்ரி மந்திரம் 

b) யஜுர் வேத மந்திரம்

c) உபநிடதம்

d) சம்ஹிதைகள்

Answer: a

 

  1. Choose the rightly matched option

 Religion – Holy book

Buddhism – Adigrantham

Islam – Quran

Jainism – Tripitaka

Zorastrium – Jant Avasta

 

a) 1,2 is correct 

b) 2,3 is correct

c) 1,4 is correct 

d) 2,4 is correct

 

சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடைக்குறிப்புகளைக் கண்டறிக.

 சமயம் – புனிதநூல்

  1. பௌத்தம் – ஆதிகிரந்தம்
  2. இஸ்லாம் – திருக்குரான்
  3. சமணம் – திரிபீடகம்
  4. ஜொராஸ்டிரியம் – ஜென்ட் அவஸ்தா

 

a) 1,2 சரியானவை 

b) 2,3 சரியானவை

c) 1,4 சரியானவை 

d) 2,4 சரியானவை

Answer: d

 

  1. The number of ways shown by Bhagavad Gita

a) One

b) Two

c) Three

d) Four

கீதை உணர்த்தும் மார்க்கங்களின் எண்ணிக்கை

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

Answer: d

 

  1. The meaning of the word Jener

a) one who has control the senses

b) one who wears the direction

c) They swim the sea of births

d) One who wear white dress

 

ஜீனர் என்ற சொல்லின் பொருள்

a) புலன்களை அடக்கியாள்பவர்

b) திசைகளை ஆடைகளாக அணிபவர்

c) பிறவிப் பெருங்கடலை நீந்துபவர்

d) வெண்ணிற ஆடை அணிபவர்

Answer: a

 

  1. Match the following

A) Ahimsa – 1. Brahmacharya

B) Truth – 2. not causing harm

C) Astheyam – 3. Speaking the truth

D) Humility – 4. Abstain from Stealing

பொருத்துக

A) அகிம்சை – 1. பிரம்மச்சரியம்

B) வாய்மை – 2. தீங்கிழைக்காமை

C) அஸ்தேயம் – 3. உண்மையே பேசுதல்

D) தன்னடக்கம் – 4. திருடாமை

 

 A B C D

a) 3 4 2 1 

b) 3 1 4 2

c) 2 3 4 1

d) 4 1 2 3

Answer: c

 

  1. Who of the following composed songs on Krishna putting himself in the place of mother Yashoda?

a) Poigaiazhwar 

b) Periyazhwar

c) Nammazhwar 

d) Andal

கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?

a) பொய்கை ஆழ்வார் 

b) பெரியாழ்வார்

c) நம்மாழ்வார்

d) ஆண்டாள்

Answer: d

 

  1. Who preached the Advaita philosophy?

a) Ramanujar

b) Ramanandal

c) Nammazhwar 

d) Adi Shankara

 

அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார் ?

a) இராமானுஜர்

b) இராமாநந்தர்

c) நம்மாழ்வார்

d) ஆதிசங்கரர்

Answer: d

 

  1. Who spread the Bhakthi ideology in northern India and made it a mass movement?

a) Vallabhacharya 

b) Ramanujar

c) Ramananda

d) Surdas

பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?

a) வல்லபாச்சாரியார் 

b) இராமானுஜர்

c) இராமாநந்தர்

d) சூர்தாஸ்

Answer: c

 

  1. Who made Chishti order popular in India?

a) Moinuddin Chishti 

b) Suhrawardi

c) Amir Khusru

d) Nizamuddin Auliya

சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார் ?

a) மொய்னுதீன் சிஸ்டி 

b) சுரவார்டி

c) அமீர் குஸ்ரு

d) நிஜாமுதின் அவுலியா

Answer: a

 

  1. Who is considered their first guru by the Sikhs?

a) Lehna

b) Guru Amir Singh

c) Guru Nanak 

d) Guru Gobind Singh

சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர் ?

a) லேனா

b) குரு அமீர் சிங்

c) குரு நானக்

d) குரு கோவிந்த சிங்

Answer: c

 

  1. Periyazhwar was earlier known as ——

a) Ranganatha

b) Vishnu chittar

c) Krishna

d) Nammazhwar

பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர்

a) ரங்கநாதர்

b) விஷ்ணு சித்தர்

c) கிருஷ்ணர்

d) நம்மாழ்வார்

Answer: b

 

  1. —– is the holy book of the Sikhs.

a) Kirtan

b) Guru Granth Sahib

c) Dharma Shalas

d) Khalsa

சீக்கியர்களின் புனித நூல் ——- ஆகும்.

a) கீர்த்தன்

b) குரு கிரந்சாகிப்

c) தர்மசாலை

d) கால்சா

Answer: b

 

  1. Meerabai was the disciple of ——–

a) Ramanuja

b) Ramananda

c) Ravidas

d) Lord Krishna

மீராபாய் ——- என்பாரின் சீடராவார்

a) இராமானுஜர்

b) இராமானந்தர்

c) ரவிதாஸ்

d) கிருஷ்ண பகவான்

Answer: d

 

  1. Philosophy is known as vishistadvaita.

a) Adi Shankara 

b) Ramanuja

c) Vallabhacharya 

d) Tulsidas

——— என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது.

a) ஆதிசங்கரர்

b) இராமானுஜர்

c) வல்லபாச்சாரியார் 

d) துளசிதாசர்

Answer: b

 

  1. Gurudwara Darbar Sahib is situated at —— in Pakistan.

a) Lahore

b) Gurdaspur

c) Kartarpur

d) Bihar

தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ——— என்ற இடத்தில் அமைந்துள்ளது.

a) லாகூர்

b) குர்தாஸ்பூர்

c) கர்தார்பூர்

d) பீகார்

Answer: c

 

  1. Match the following:

A) Pahul – 1. Kabir

B) Ramcharitmanas – 2. Sikhs

C) Srivaishnavism – 3. Abdul-Wahid Abu Najib

D) Granthavali – 4. Guru Gobind Singh

E) Suhrawardi – 5. Tulsidas

 

பொருத்துக

A) பாகல் – 1.கபீர்

B) இராமசரிதமானஸ் – 2. இராமானுஜர்

C) ஸ்ரீவைஷ்ணவம் – 3.அப்துல்-வாஹித் அபு நஜிப்

D) கிரந்தவளி – 4.குரு கோவிந் சிங்

E) சுரவார்டி – 5.துளசிதாசர்

 A B C D E

a) 5 4 3 2 1

b) 4 5 1 2 3

c) 4 5 2 1 3

d) 1 3 2 5 4

 

Answer: c

 

  1. Find out the right pair/pairs:

Andal – Srivilliputhur

Tukaram – Bengal

Chaitanyadeva – Maharashtra

Brahma sutra – Vallabacharya

Gurudwaras – Sikhs

 

சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்

துக்காராம் – வங்காளம்

சைதன்யதேவா – மகாராஷ்டிரா

பிரம்ம சூத்திரம் – வல்லபாச்சாரியார்

குருத்வாராக்கள் – சீக்கியர்கள்

 

a) A, E 

b) C, D 

c) D, E 

d) C, A

Answer: a

 

  1. Assertion (A): After Guru Gobind Singh, the holy book Guru Granth Sahib came to be considered the guru.

Reason (R): Guru Gobind Singh was the compiler of Guru Granth Sahib.

 

a) R is not the correct explanation of A

b) R is the correct explanation of A

c) A is correct but R is wrong

d) Both A and R are wrong

 

கூற்று (A): குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.

காரணம் (R) : குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்

 

a) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல

b) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று, காரணம் இரண்டும் தவறு

Answer: d

 

  1. ——— Provided Hinduism with a philosophic doctrine of Advaita.

a) Adi Sankara 

b) Ramanuja

c) Ramananda 

d) Chaitanya

அத்வைதம் என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர்

a) ஆதிசங்கரர்

b) இராமானுஜர்

c) இராமானந்தர்

d) சைதன்யர்

Answer: a

 

  1. Appar as a Jaina was known as

a) Harisena

b) Theerthankara

c) Sivagnana Sithiyar 

d) Dharmasena

சமண மதத்திலிருந்தபோது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார்

a) அரிசேனா

b) தீர்த்தங்கரர்

c) சிவஞான சித்தியார் 

d) தர்மசேனர்

Answer: d

 

  1. Find out the correct statement

a) Appar, a Saiva in his early life, later persuaded by his sister, turned to Jainism.

b) Sufis regarded god as the supreme beauty.

c) The Bengal Vaishnavites tried to reform Hinduism by promoting Ram bhakti.

d) Devotional songs of Ravidas were included in the Buddhist Scriptures.

 

சரியான கூற்றினைத் தேர்ந்தெடு:

a) தனது தொடக்ககால வாழ்வில் சைவராக இருந்த அப்பர் தனது தமக்கையால் சைவ மதத்திலிருந்து சமண மதத்திற்கு மாறினார்.

b) சூஃபி இயக்கத்தவர் கடவுளை அழகின் உச்சமாகக் கருதினார்.

c) வங்காள வைணவர்கள் ராமர் மீது பக்தியை தூண்டி இந்து மதத்தை சீர்படுத்த முயற்சித்தார்கள்.

d) ரவிதாஸின் பக்தி பாடல்கள் புத்த வேத நூல்களில் சேர்க்கப்பட்டன.

Answer: b

error: Content is protected !!