- பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964) புதுவை மாவட்டத்தில் கனகசபை – இலக்குமி அம்மையார் க்கு ஏப்ரல் 11, 1882 அன்று பிறந்தார்.
- இவருடைய இயற்பெயர் கனக சுப்பிரத்தினம்.
- தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
- பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
- பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார்.
- அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்.
- பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் பாடிய “எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத் தாமே, “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது” எனச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்.
- தொடக்க கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம்.
- இவர் தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம்.
- இவரின் கவித்திறன் கண்டு “நாவலர் சோமசுந்தர பாரதியார்” தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும் 25000 ரூபாய் நன்கொடையும் அளித்தார்.
- வ.ரா.வின் அழைப்பின் பேரில் “இராமனுஜர்” என்னும் படத்திற்கு திரைப்படப்பாடல் எழுதினார். 1990ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கியது.
- To Download TNPSC POTHU TAMIL NOTES – www.tnpscshouters.com
- மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார்.
- பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர். குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், ஆகிய காப்பியங்களையும் எண்ணற்ற பாடல்களையும் இயற்றியவர்.
- ‘குயில்’ என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார்.
- இவருடைய ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது.
- Click Here to Get Instagram Followers Free
- தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
ஆசிரியர் – பாரதிதாசன்
1891 ஏப்ரல் 29 ஆம் நாள் புதுச்சேரி கனகசபைக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் பாரதிதாசன். பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம். 1895 இல் ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் ஆரம்பக்கல்வி பயின்றார். 1906 இல் வித்வான் தேர்வில் தேர்ச்சியடைந்தார். 1907 இல் புதுச்சேரி மகாவித்வான்ஆ.பெரியசாமி ஐயாவிடமும் பங்காரு பத்தரிடமும் இலக்கண – இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். 1908 இல் புதுச்சேரியில் பாரதியாரைச் சந்தித்தார். பாரதியாரின் வேண்டுகோளுக்கிணங்க, ‘எங்கெங்குக் காணினும் சக்தியடா’ எனும் பாடலைப் பாடிப் பாரதியின் அன்பைப் பெற்றார். பாரதியிடம் தாம் கொண்ட மதிப்பின் காரணமாகப் ‘பாரதிதாசன்’ எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டார். சமூக விடுதலைக்காகவே ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் படைத்தார். 1946 இல் அறிஞர் அண்ணா தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு ரூபாய் 25,000/- நிதி அளிக்கப் பெற்றது. 1954 இல் புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1962 இல் இராஜாஜியால் சிறப்பிக்கப் பெற்றார். 1964 ஏப்ரல் 21 ஆம் நாள் இயற்கை எய்தினார். பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தாலும் அவரது பாடல்கள் தமிழரின் வாழ்விற்கும் மேன்மைக்கும் அடிப்படையாக அமைந்தன. இவ்வாறு தேசியத்திலிருந்து தமிழ்த் தேசியமாகி, சர்வ தேசிய எல்லைகளை நோக்கி விரிகிற படைப்புகளாகப் பாரதிதாசன் படைப்புகள் அமைந்துள்ளன.
பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: சிறப்பு பெயர்
- புரட்சிக்கவி (அறிஞர் அண்ணா)
- புரட்சிக்கவிஞர் (பெரியார்)
- பாவேந்தர்
- புதுவைக்குயில்
- பகுத்தறிவு கவிஞர்
- தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
- இயற்கை கவிஞர்
புனைப் பெயர்கள்
- பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: பாரதிதாசன் பல்வேறு புனைப் பெயர்களில் தனது கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவன,
- கண்டழுதுவோன்
- கிறுக்கன்
- கிண்டல்காரன்
- பாரதிதாசன்
படைப்புகள்
- பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: அகத்தியன் விட்ட புதுக்கரடி, அமைதி, செந்தமிழ் நிலையம், அழகின் சிரிப்பு, இசையமுதம், பாரதசக்தி நிலையம், இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்),
- குடியரசுப் பதிப்பகம், இருண்ட வீடு (33 தலைப்பு), முத்தமிழ் நிலையம், இளைஞர் இலக்கியம், பாரி நிலையம், உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு, உரிமைக் கொண்டாட்டமா?, குயில்,
- எதிர்பாராத முத்தம், வானம்பாடி, எது பழிப்பு, குயில், ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, கடவுளைக் கண்டீர்!, கண்ணகி புரட்சிக் காப்பியம், அன்பு நூலகம்,
- கதர் இராட்டினப்பாட்டு, காசி ஈ.லட்சுமண பிரசாத்), கலை மன்றம், கற்புக் காப்பியம், காதல் நினைவுகள், காதல் பாடல்கள், பூம்புகார் பிரசுரம்,
- காதலா? – கடமையா?, குடியரசுப் பதிப்பகம், குடும்ப விளக்கு, முல்லைப் பதிப்பகம், குயில் பாடல்கள், பூம்புகார் பிரசுரம், குறிஞ்சித் திட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,
- சேர தாண்டவம், தமிழ் இயக்கம், தமிழச்சியின் கத்தி, தமிழுக்கு அமுதென்று பேர், தலைமலை கண்ட தேவர், பூம்புகார் பிரசுரம், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு, திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்,
- தேனருவி இசைப் பாடல்கள், நல்ல தீர்ப்ப, முல்லைப் பதிப்பகம், நீலவண்ணன் புறப்பாடு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் ஆத்திசூடி, பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி, பாரதிதாசன் கதைகள்,
- முரசொலிப் பதிப்பகம் கடலூர் டி.எஸ்.குஞ்சிதம், பாரதிதாசன் பன்மணித் திரள், பிசிராந்தையார், புகழ் மலர்கள் நாள் மலர்கள், புரட்சிக் கவி, துரைராசு வெளியீடு,
- பெண்கள் விடுதலை. பொங்கல் வாழ்த்துக் குவியல், மணிமேகலை வெண்பா, அன்புநூலகம், மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது, முல்லைக் காடு, காசி ஈ.லட்சுமண பிரசாத், விடுதலை வேட்கை, வீட்டுக் கோழியும் – காட்டுக் கோழியும், குயில் புதுவை, வேங்கையே எழுக.

பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: பாரதிதாசன் இயற்றிய நூல்கள்
- இசை அமுது
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- சேரதாண்டவம்
- அழகின் சிரிப்பு
- புரட்சிக்கவி
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- குறிஞ்சித்திட்டு
- கண்ணகி புரட்சிக்காப்பியம்
- மணிமேகலை வெண்பா
- காதல் நினைவுகள்
- கழைக்கூத்தியின் காதல்
- தமிழச்சியின் கத்தி
- இளைஞர் இலக்கியம்
- சுப்பிரமணியர் துதியமுது
- சுதந்திரம்
- தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது)
பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: உரைநடை நூல்கள்
- திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: பாரதிதாசன் நாடகங்கள்
- சௌமியன்
- நல்ல தீர்ப்பு
- பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
- சக்திமுற்றப் புலவர்
- அமைதி ஊமை (தங்கக் கிளி பரிசு)
- இரணியன் அல்லது இணையற்ற வீரன்
- சௌமியன்
- படித்த பெண்கள்
- இன்பக்கடல்
- நல்லதீர்ப்பு
- அம்மைச்சி
- ரஸ்புடின்
- அமைதி
பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: பாரதிதாசன் நடத்திய இதழ்கள்
- குயில்
- முல்லை (முதலில் தொடங்கிய இதழ்)
பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: பாவேந்தர் பாரதிதாசன் பற்றி
புதுமைபித்தன்
- அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்.
கு.ப.இராசகோபாலன்
- பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி.
சிதம்பரநாத செட்டியார்
- அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகி விடுவான்.
திரு.வி.க
- குயிலின் பாடலும் மயிலின் ஆடலும் வண்டின் யாழும் அருவியின் முழவும் இனிக்கும், பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்.
வி.ஆர்.எம்.செட்டியார்
- புதிய கவிதையை சிருஷ்டி செய்கிறார்;
- இயற்கையாகவே செய்கிறார்; தமிழ் மொழியில் புதியவளைவும், நெளிவும் மெருகும் ஏற்றுகிறார்;
- அவர் இசை வெறியில் கவிதைக் கனலுடன் பாடும்போது நாம் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் சலிப்பின்றிக் கேட்டு இன்புறலாம். இது உண்மை! மறுக்க முடியாத உண்மை.
சுரதா
- தடையேதும் இல்லை இவர் நடையில், வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கனுக்களுண்டு.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
- பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர்.
- தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது
- ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
- 1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
- 1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
- 2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
இறப்பு
- பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
காலவரிசை
- பாரதிதாசன்: BHARATHIDASAN HISTORY IN TAMIL: 1891 – புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
- 1919 – காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
- 1920 – பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
- 1954 – புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1960 – சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
- 1964 – ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
- 1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.
- 1990ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கியது
- 2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.