BHARAT SERIES NUMBER PLATE IN TAMIL: பாரத் வரிசை பதிவு எண்

Photo of author

By TNPSC EXAM PORTAL

BHARAT SERIES NUMBER PLATE IN TAMIL

BHARAT SERIES NUMBER PLATE: மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 47 இன் கீழ், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அந்த நபர் பயன்படுத்தும் வாகனங்களை வேறு மாநிலத்தில் அதே பதிவெண்ணுடன் 12 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள தற்பொழுது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து அவர்கள் பணியாற்றும் மாநிலத்தில் தங்கள் வாகன எண்ணை 12 மாதங்களுக்குள் மறு பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கு சொந்த மாநிலத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மேலும் புதிய மாநிலத்தில் மீண்டும் சாலை வரி செலுத்த வேண்டும். இவ்வாறு பதிவை மாற்றும் போது பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றது.

Nirvik Scheme (Niryat Rin Vikas Yojana) நிர்விக் திட்டம் (நிர்யாத் ரின் விகாஸ் யோஜனா)

வாகன உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது, மீண்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க புதிய வாகனப் பதிவில் பிஎச்-வரிசை (BH-Series) எனத் துவங்கும் பதிவெண்ணை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு YY BH #### XX என்ற வடிவில் பதிவு எண் அளிக்கப்படும்.

  • YY: வாகனம் பதிவு செய்யப்படும் ஆண்டு
  • BH: பாரத் வரிசைக்கான (Bharat Series) குறியீடு
  • ####: 0000 முதல் 9999 (Randomized)
  • XX: AA முதல் ZZ வரையுள்ள எழுத்துக்கள்

பாரத் வரிசை (Bharat Series) வாகனப் பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலகங்கள் உள்ள தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

BHARAT SERIES NUMBER PLATE: இந்தப் பதிவின் கீழ் மோட்டார் வாகன வரி, இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது இரண்டு மடங்காக விதிக்கப்படும். ஒரு புதிய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் போது இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் முழுவதும் வாகன உரிமையாளர்கள் வாகனங்களை இயக்க உதவும்.

பதினான்காம் ஆண்டு நிறைவடைந்த பிறகு மோட்டார் வாகன வரி ஆண்டுதோறும் விதிக்கப்படும். இது அந்த வாகனத்திற்கு முன்பு வசூலிக்கப்பட்ட தொகையில் பாதி ஆகும்.

BHARAT SERIES NUMBER PLATE IN TAMIL: பாரத் வரிசை பதிவு எண்
BHARAT SERIES NUMBER PLATE IN TAMIL: பாரத் வரிசை பதிவு எண்

BHARAT SERIES NUMBER PLATE IN ENGLISH

BHARAT SERIES NUMBER PLATE: Under Section 47 of the Motor Vehicles Act, 1988, government and private sector employees are currently allowed to use vehicles used by that person in another state with the same registration number for a period of 12 months on transfer.

Hence they have to re-register their vehicle number within 12 months in the state where they are working. For this it is necessary to obtain a certificate of unobstructed status in the home state. Also need to pay road tax again in the new state. Thus various practical problems arise while changing the record.

Ministry of Road Transport and Highways has introduced BH-Series in new vehicle registration to avoid re-registration when vehicle owners move from state to state.

New vehicles registered under this scheme will be given a registration number in the form YY BH #### XX.

  • YY: Year of vehicle registration
  • BH: Code for Bharat Series
  • ####: 0000 to 9999 (Randomized)
  • XX: Letters AA to ZZ

Bharat Series vehicle registration facility is applicable to security personnel on voluntary basis, Central and State Government employees, Central and State Public Sector Undertakings and employees of Private Sector Undertakings having four or more offices.

BHARAT SERIES NUMBER PLATE: Motor vehicle tax under this registration is leviable for two years or twice. Enables vehicle owners to move vehicles across other states or union territories in India when they are transferred to a new state or union territory. Motor vehicle tax is levied annually after completion of the fourteenth year. This is half of what was charged earlier for that vehicle.

error: Content is protected !!