AYUSHMAN BHARAT HEALTH ACCOUNT IN TAMIL | ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்

Photo of author

By TNPSC EXAM PORTAL

AYUSHMAN BHARAT HEALTH ACCOUNT IN TAMIL

AYUSHMAN BHARAT HEALTH ACCOUNT IN TAMIL: நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2021 ஆம் ஆண்டு தொடங்கியது.

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளின் சுகாதாரத் தீர்வுகளை ஒன்றுடன் ஒன்று பரஸ்பரம் இணைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் உள்ளது. இந்த இயக்கமானது மருத்துவமனைகளின் செயல்முறைகளை எளிமையாக்குவதோடு சௌகரியத்தையும் அதிகப்படுத்தும்.

SEED VILLAGE SCHEME IN TAMIL | விதை கிராமத் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடிமகனும் டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டையைப் பெறுவார்கள். அவர்களது சுகாதார ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.

ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) எண்

AYUSHMAN BHARAT HEALTH ACCOUNT IN TAMIL: ABHA எண் (சுகாதார ஐடி) என்பது 14 இலக்க எண்ணாகும். இது இந்தியாவின் டிஜிட்டல் ஹெல்த்கேர் சுற்றுச்சூழல் அமைப்பில் உங்களை தனித்துவமாக ஒரு பங்கேற்பாளராக அடையாளப்படுத்தும். இது நாடு முழுவதும் உள்ள சுகாதார வழங்குநர்கள் மற்றும் பணம் செலுத்துபவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் எண் – பயன்கள்

AYUSHMAN BHARAT HEALTH ACCOUNT IN TAMIL: ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் கீழ், தங்கள் ஆபா (ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்) எண்களை மக்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். அவர்களின் டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளை அதனுடன் இணைக்கவும் முடியும்.

சுகாதாரச் சேவை வழங்குநர்களால் மருத்துவ அடிப்படை முடிவுகள் எடுக்கும் திறனை மேம்படுத்துவதற்கும் இது உதவும். தொலைமருத்துவம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலமும், சுகாதாரச் சேவைகளை நாடு முழுவதும் எளிதில் பெரும் வசதியைச் செயல்படுத்துவதன் மூலமும் தரமான சுகாதாரப் பாதுகாப்பிற்கான சமமான அணுகலை இந்தப் பணி மேம்படுத்தும்.

ஒரு பயனர் தனது சுகாதார ஐடியை நிரந்தரமாக நீக்கலாம் அல்லது தற்காலிகமாக செயலிழக்கச் செய்யலாம்.

AYUSHMAN BHARAT HEALTH ACCOUNT IN ENGLISH

AYUSHMAN BHARAT HEALTH ACCOUNT IN ENGLISH: A nationwide Ayushman Bharat digital initiative was launched in 2021 by the Ministry of Health and Family Welfare, Government of India.

Ayushman Bharat is a digital initiative to interconnect the healthcare solutions of hospitals across the country. This move will simplify processes and increase convenience in hospitals. Under this scheme every citizen will get a digital health identity card. Their health records will be digitally protected.

Ayushman Bharat Health Account (ABHA) Number

AYUSHMAN BHARAT HEALTH ACCOUNT IN ENGLISH: ABHA Number (Health ID) is a 14 digit number. It will uniquely identify you as a participant in India’s digital healthcare ecosystem. It will be accepted by healthcare providers and payers across the country.

Ayushman Bharat Health Account Number – Benefits

AYUSHMAN BHARAT HEALTH ACCOUNT IN ENGLISH: Under the Ayushman Bharat Digital Initiative, people can generate their Aabha (Ayushman Bharat Health Account) numbers. Their digital health records can be linked to it. It will also help improve the ability of health care providers to make basic clinical decisions.

This work will promote equitable access to quality healthcare by promoting the use of technologies such as telemedicine and making healthcare services more accessible across the country. A user can permanently delete or temporarily deactivate their Health ID.

error: Content is protected !!