THAYUMANAVAR SCHEME IN TAMIL | முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

Photo of author

By TNPSC EXAM PORTAL

THAYUMANAVAR SCHEME IN TAMIL | முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: 2024 – 25 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். ‘மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பில் 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ் மொழிக்கும்,  நம்முடைய தொன்மை சிறப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

TAMIL PUTHALVAN THITTAM IN TAMIL | தமிழ்ப் புதல்வன் திட்டம்

அதேபோல ஏழைகளின் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் புதிய திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழைகளை மீட்டெடுக்க ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற புதிய திட்டத்தை பேரவையில் அறிவித்தார் தங்கம் தென்னரசு. இரண்டு ஆண்டுகளில் மிகவும் ஏழ்மையான குடும்பங்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுக்கும் வகையில் இந்தத் திட்டம் அமையும்.

‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ 5 லட்சம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் மிகவும்  ஏழ்மையான ஐந்து லட்சம் குடும்பங்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையில், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 2.2% ஆக குறைந்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.  தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியவர், ஒற்றை பெற்றோர் குழந்தைகள் உள்ளிட்டவர்களை கண்டறிந்து அடிப்படை வசதி, கல்வி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்தார்.

THAYUMANAVAR SCHEME IN TAMIL | முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: மேலும், 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!