TAMIL PUTHALVAN THITTAM IN TAMIL | தமிழ்ப் புதல்வன் திட்டம்: புதுமைப்பெண் திட்டம்போல, அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றவும், உயர்கல்வி சேர்க்கையை உயர்த்தவும் ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற மாபெரும் திட்டம் வரும் நிதி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும்.
தமிழ்ப் புதல்வன் திட்டம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கப்படும்.
ENNUM EZHUTHUM SCHEME IN TAMIL | எண்ணும் எழுத்துத் திட்டம்
இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும், அவர்களைக் கல்வியில் மட்டும் அல்ல திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு அறிமுகப்படுத்திய புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் வரிசையில் ’தமிழ் புதல்வன்’ திட்டமும் இணைந்துள்ளதுள்ளது வரவேற்கத்தக்கது.