STATES STARTUPS RANKING LIST 2022: மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் வெளியான 2022ம் ஆண்டிற்கான தரவரிசைப்பட்டியலில் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதில், மிகச் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்தது. அதேநேரம், ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு உகந்த சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக, தமிழ்நாடு தேர்வாகியுள்ளது.
மிகச் சிறந்த மாநிலங்கள்
- குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்
சிறந்த மாநிலங்கள்
- மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசல பிரதேசம், மேகாலயா
முதன்மை மாநிலங்கள்
- ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா
ஆர்வம் காட்டும் மாநிலங்கள்
- பீகார், அரியானா. அந்தமான் – நிகோபார் தீவுகள், நாகாலாந்து
முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள்
- சத்தீஸ்கர், டெல்லி. ஜம்மு-காஷ்மீர், சண்டிகர்,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக்