KALAIGNAR KAPITU THITTAM | முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

Photo of author

By TNPSC EXAM PORTAL

KALAIGNAR KAPITU THITTAM: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும்.

இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.

Table of Contents

KALAIGNAR KAPITU THITTAM – வரலாறு

KALAIGNAR KAPITU THITTAM: 2009 ஜூலை 23 ஆம் நாள் உயர் ரக மருத்துவ சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் புதிய காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகம் செய்தது. அப்போது ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்குக் காப்பீட்டுத் தவணைத் (பிரிமியம்) தொகையாக ஆண்டொன்றுக்கு 517 கோடி ரூபாயை தமிழக அரசே தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கியது.

STEP SCHEME IN TAMIL | STEP திட்டம்

2011 ஜூலை மாதம் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டது. செப்டம்பர் 11 2018 அன்று இந்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துடன் இணைக்கப்பட்டு மத்திய மாநில அரசுகள் தவணைத் தொகையைப் பங்கிட்டுக் கொண்டனர்.

பயனாளிகள்

KALAIGNAR KAPITU THITTAM: அரசின் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளோரின் குடும்பங்கள் மற்றும் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 72,000க்கும் குறைவாக உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இதன் பயனைப் பெறலாம்.

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை பெற்று பதிவு செய்து கொள்ளவேண்டியது அவசியம்.

தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தில் ரூ. 1 முதல் 2 இலட்சம் வரை சில சிகிச்சைகளுகும், மற்ற சிகிச்சைகளுக்கு 5 லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகளை ஓராண்டு காலத்திற்கு ஒரு குடும்பத்தினர் பயன்பெறலாம். அரசால் குறிப்பிட்ட மருத்துவமனைகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறலாம்.

error: Content is protected !!