AGRICULTURE INFRASTRUCTURE FUND IN TAMIL | வேளாண்‌ உட்கட்டமைப்பு நிதி

Photo of author

By TNPSC EXAM PORTAL

AGRICULTURE INFRASTRUCTURE FUND IN TAMIL

AGRICULTURE INFRASTRUCTURE FUND IN TAMIL: விவசாயிகள்‌ உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்புக்கூட்டி, இலாபகரமான விலைக்கு விற்பனை செய்யும்‌ வகையில்‌, அரசு, தனியார்‌ நிறுவனம்‌ மூலம்‌ பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு வேளாண்மை உட்கட்டமைப்‌பு நிதித் திட்டம் மூலம் வட்டி மானியத்துடன்‌ ரூ. 2 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

கிராம அளவில்‌ உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும்‌ விவசாயிகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களுக்கு வட்டி மானியத்துடன்‌ கடன்‌ வழங்கும்‌ வகையில்‌ வழங்கப்படும் ஒன்றிய அரசின்‌ வேளாண்‌ உட்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund) எனும்‌ திட்டம்‌ தமிழ்நாட்டில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண்‌ உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தில்‌ வழங்கப்படும்‌ உதவிகள்‌

AGRICULTURE INFRASTRUCTURE FUND IN TAMIL: அறுவடைக்குப்‌ பின்‌ மேற்கொள்ளவேண்டிய பணிகளுக்கான கட்டமைப்புகளுக்கும்‌, விவசாயிகள்‌ ஒன்றிணைந்து, சமுதாய ரீதியாக உருவாக்கப்படும்‌ வேளாண்‌ கட்டமைப்புகளுக்கும்‌ வங்கிகளில்‌ அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரை இத்திட்டத்தில்‌ கடன்‌ பெறலாம்‌.

அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரையிலான கடனுக்கு ஏழு ஆண்டுகளுக்கு 3 சதவிகித வட்டி மானியம்‌ வழங்கப்படும்‌.

RASHTRIYA KRISHI VIKAS YOJANA IN TAMIL – RKVY | ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா | தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம்

குறு மற்றும்‌ சிறு நிறுவனங்களுக்கான கடன்‌ உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE) திட்டத்திலிருந்து ரூ. 2 கோடி வரையிலான கடனுக்கு உத்தரவாதமும்‌ வழங்கப்படுகிறது.

யார்‌ யார்‌ எல்லாம்‌ இத்திட்டத்தில்‌ பயன்பெற முடியும்‌?

AGRICULTURE INFRASTRUCTURE FUND IN TAMIL: விவசாயிகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்புகள்‌, சுயஉதவிக்‌ குழுக்கள்‌, கூட்டுப்‌ பொறுப்புக் குழுக்கள்‌, தொடக்க வேளாண்மைக்‌ கூட்டுறவுக்‌ கடன்‌ சங்கங்கள்‌, விற்பனைக்‌ கூட்டுறவு சங்கங்கள்‌, வேளாண்‌ தொழில்முனைவோர்‌, புதியதாக தொழில்‌ துவங்க முன்வரும்‌ நிறுவனங்கள்‌ (Start ups), மத்திய / மாநில அமைப்புகள்‌ அல்லது உள்ளாட்சி அமைப்புகளால்‌ முன்மொழியப்படும்‌ அரசு-தனியார்‌ பங்கேற்புடன்‌ கூடிய அமைப்புகள்‌, மாநில முகமைகள்‌ / வேளாண்‌ விளைபொருட்கள்‌ விற்பனைக் குழுமங்கள்‌ (APMCs), தேசிய மற்றும்‌ மாநில கூட்டுறவு சங்கங்களின்‌ கூட்டமைப்புகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களின்‌ கூட்டமைப்புகள்‌, சுயஉதவிக்‌ குழுக்களின்‌ கூட்டமைப்புகள்‌, நுகர்வோர்‌ பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பெரு நிறுவனங்கள்‌, ஏற்றுமதியாளர்கள்‌, உணவு பதப்படுத்துவோர்‌, உபகரணங்கள்‌ தயாரிப்போர்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ கடன்‌ வசதி பெறலாம்‌.

இத்திட்டத்தின் கீழ்‌, கடன்‌ வழங்குவதற்காக, தமிழ்நாட்டில்‌ உள்ள பெரும்பாலான முன்னோடி வங்கிகள்‌, அதிகபட்சமாக 9 சதவிகித வட்டியில்‌ கடன்‌ வழங்குவதற்கு ஒன்றிய அரசுடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ செய்துள்ளன. இது தொடர்பான கூடுதல்‌ விபரங்களை www.agriinfra.dac.gov.in எனும்‌ இணையதளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

AGRICULTURE INFRASTRUCTURE FUND IN TAMIL: தேசிய தோட்டக்கலை இயக்கம்‌, வேளாண்‌ இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கம்‌ போன்ற பல்வேறு திட்டங்களின்‌ மானியத்தையும்‌ இணைந்தே பெற்றுக்‌ கொள்ளும்‌ வசதி இத்திட்டத்தில்‌ உள்ளதால்‌, “மூன்று சதவிகித வட்டி (3%) தள்ளுபடியுடன்‌” கடன்‌ வசதி பெற விரும்புபவர்கள்‌ தங்கள்‌ திட்டத்திற்கான விபரங்களுடன்‌ அருகில்‌ உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்‌ விற்பனை, வேளாண்‌ பொறியியல்‌ துறை அலுவலர்களையோ, வங்கி மேலாளர்கள்‌ அல்லது நபார்டு வங்கியின்‌ மாவட்ட வளர்ச்சி மேலாளர்களையோ தொடர்புகொண்டு பயனடையலாம்.

AGRICULTURE INFRASTRUCTURE FUND IN ENGLISH

AGRICULTURE INFRASTRUCTURE FUND IN ENGLISH: In order to increase the value of the produce produced by the farmers and sell it at a profitable price, the government and private companies will provide various infrastructure through the Agricultural Infrastructure Fund Scheme along with an interest subsidy of Rs. Loans up to 2 crores are provided.

The Union Government’s Agriculture Infrastructure Fund scheme is being implemented in Tamil Nadu to provide loans with interest subsidy to farmers and farmer producers who come forward to build infrastructure at the village level.

Assistance under Agricultural Infrastructure Fund

AGRICULTURE INFRASTRUCTURE FUND IN ENGLISH: For structures for post-harvest work and agricultural structures to be developed by farmers together and socially, banks can provide a maximum of Rs. 2 crores can be availed under this scheme.

A maximum of Rs. 3% interest subsidy for seven years for loans up to Rs 2 crore.

From the Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE) scheme Rs. Guarantee is also provided for loans up to 2 crores.

Who can benefit from this scheme?

AGRICULTURE INFRASTRUCTURE FUND IN ENGLISH: Farmers, Farmer Producer Organisations, Self Help Groups, Joint Responsibility Groups, Primary Agricultural Co-operative Credit Societies, Sales Co-operative Societies, Agri-entrepreneurs, Start ups, Public-Private Partnership Organizations proposed by Central / State bodies or local bodies.

State Agencies / Agricultural Produce Marketing Corporations (APMCs), Federations of National and State Co-operative Societies, Federations of Farmer Producer Organizations, Federations of Self-Help Groups, Consumer Goods Manufacturing Companies, Exporters, Food Processors, Equipment Manufacturers can avail loan facility under this scheme.

Under this scheme, most of the pioneer banks in Tamil Nadu have entered into an MoU with the Union Government to provide loans at a maximum interest rate of 9 percent. More information regarding this can be found on the website www.agriinfra.dac.gov.in.

As this scheme has the facility of getting the grant of various schemes like National Horticulture Movement, Sub-Section for Agricultural Mechanization etc., those who want to get loan facility with “three percent interest (3%) discount” should contact the nearest Agriculture, Horticulture, Agricultural Sales, Agricultural Engineering Department Officers along with the details of their project. You can also contact Bank Managers or District Development Managers of NABARD Bank.

error: Content is protected !!