PRADHAN MANTRI FASAL BIMA YOJANA IN TAMIL
PRADHAN MANTRI FASAL BIMA YOJANA IN TAMIL: ஒரு தேசம் ஒரே திட்டம் என்ற சிந்தனையின் அடிப்படையில் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து திட்டங்களிலும் உள்ள சிறப்பான கூறுகளை எடுத்துச் சேர்த்தும், பலவீனமான குறைபாடுகளுள்ள கூறுகளை நீக்கிவிட்டும் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டத்தையும், மாற்றம் செய்யப்பட்ட அதன் இன்னொரு வடிவத்தையும் நீக்கிவிட்டு இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
நோக்கங்கள்
- இயற்கை இடர்கள், பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றினால் பயிர்கள் விளையாமல் போகும் நிலையில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கவும், காப்பீட்டு வசதியை ஏற்படுத்தி தரவும் இது வந்துள்ளது.
- விவசாயிகளின் வருமானம் பாதிப்படையாமல் பாதுகாத்து அவர்கள் விவாசயத்தை தொடர்ந்து செய்துவருவதற்கு உதவுகிறது.
- விவசாயிகள் புதுமையான நவீன வேளாண் நடைமுறைகளை கையாளுவதை ஊக்குவித்தல்.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
PRADHAN MANTRI FASAL BIMA YOJANA IN TAMIL: காரிப் பருவப் பயிர்களுக்கு 2%, ரபி பருவப் பயிர்களுக்கு 1.5% என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும். ஆண்டுப் பயிர்களான பணப் பயிர்கள், தோட்டடக் கலைப் பயிர்கள் ஆகியவற்றிற்கு 5% காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும்.
விவசாயிகள் செலுத்தும் காப்பீட்டுக் கட்டணம் மிகக் குறைவானவை. எனவே, மீதி கட்டணத்தை அரசாங்கம் செலுத்திவிடும். இயற்கைப் பேரிடர்களால் பயிர் இழப்புகள் ஏற்படும்போது விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.
அரசாங்கம் வழங்கக்கூகூய மானியங்களுக்கு உச்சவரம்பு ஏதுமில்லை. காப்பீட்டுக் கட்டண பாக்கி 90% இருந்தாலும்கூட அதை அரசே ஏற்கும்.
காப்பீட்டுக் கட்டணத்தை குறைவாக நிர்ணயித்து விவாசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை குறைவாக வழங்குவதற்கு முன்னர் வழி இருந்தது. காப்பீட்டுக் கட்டணத்திற்கு அரசு செலுத்தும் மானியச் செலவைக் குறைப்பதற்காக இப்படி செய்யப்பட்டது. இப்போது இந்த நிலை மாற்றப்பட்டுவிட்டது. காப்பீடு செய்யப்பட்டதொகையை விவசாயிகள் முழுமையாகப் பெற்று கொள்ளமுடியும்.
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு மிக அதிக அளவில் ஊக்கம் தரப்படுகிறது. சீர்மிகு கைபேசிகள் (Smart Phones) மூலம் எவ்வளவு பயிர் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது பற்றிய தரவுகள் பெறப்பட்டு பதிவேற்றப்பட்டு விவசாயிகளுக்கு சேரவேண்டிய தொகை தாமதமின்றி கிடைக்க வழி செய்யப்படும். தொகை உணர்வு செயற்கைக்கோள்களும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
PRADHAN MANTRI FASAL BIMA YOJANA IN TAMIL: பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத்திட்டம் இதற்கு முன்பு இருந்த வேளாண் காப்பீட்டு தேசியத்திட்டம், மாற்றியமைக்கப்பட்ட வேளாண் காப்பீட்டு தேசியத் திட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டமாகும். இந்தத் திட்ட செயலாக்கத்தில் சேவை வரிக்கு விலக்கு தரப்பட்டுள்ளது. புதிய திட்டம் காப்பீட்டுக் கட்டணத்தில் விவசாயிகளுக்கு 75 முதல் 80% மானியத்தை உறுதி செய்யும்.
PRADHAN MANTRI FASAL BIMA YOJANA IN ENGLISH
PRADHAN MANTRI FASAL BIMA YOJANA IN ENGLISH: A new crop insurance scheme has been introduced based on the idea of one nation one scheme. This new scheme has been introduced by taking the best elements of all the earlier schemes and removing the weak and deficient elements. This new insurance scheme has come into force after the abolition of the existing National Agricultural Insurance Scheme and its modified form.
Objectives
- It has come to provide financial assistance and insurance facility to farmers in case of crop failure due to natural hazards, pests and diseases.
- to protect the income of the farmers and help them to continue farming.
- Encouraging farmers to adopt innovative modern agricultural practices.
Special features of this scheme
PRADHAN MANTRI FASAL BIMA YOJANA IN ENGLISH: A uniform insurance premium of 2% for Kharib season crops and 1.5% for Rabi season crops will be collected from the farmers. Farmers have to pay 5% insurance premium for annual crops like cash crops and horticultural crops. Insurance premiums paid by farmers are very low. Therefore, the government will pay the remaining fee. Farmers get full compensation in case of crop losses due to natural calamities.
There is no ceiling on the amount of subsidies that the government can provide. Even if the insurance premium is 90% arrears, it will be accepted by the government.
Earlier there was a way to lower the insurance premium and provide less compensation to the farmers. This was done to reduce the cost of government subsidies for insurance premiums. Now this situation has changed. Farmers can get the sum insured in full.
The use of technologies is highly encouraged. Through smart phones, the data about how much crop has been cut and transported will be collected and uploaded and the due amount will be made available to the farmers without delay. A number of sensing satellites will also be used.
PRADHAN MANTRI FASAL BIMA YOJANA IN ENGLISH: The Prime Minister’s Crop Insurance Scheme is a scheme introduced to replace the earlier National Agricultural Insurance Scheme, the modified National Agricultural Insurance Scheme. Service tax is exempted on implementation of this scheme. The new scheme will ensure 75 to 80% subsidy to farmers on the insurance premium.