AYUSHMAN BHARAT DIGITAL MISSION IN TAMIL: நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2021 ஆம் ஆண்டு தொடங்கியது.
AYUSHMAN BHARAT DIGITAL MISSION IN TAMIL – BENEFTIS / பயன்கள்
AYUSHMAN BHARAT DIGITAL MISSION IN TAMIL: நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளின் சுகாதாரத் தீர்வுகளை ஒன்றுடன் ஒன்று பரஸ்பரம் இணைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் உள்ளது.
இந்த இயக்கமானது மருத்துவமனைகளின் செயல்முறைகளை எளிமையாக்குவதோடு சௌகரியத்தையும் அதிகப்படுத்தும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடிமகனும் டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டையைப் பெறுவார்கள். அவர்களது சுகாதார ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.
திட்ட செயல்பாடு
AYUSHMAN BHARAT DIGITAL MISSION IN TAMIL: 2022 தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு ரூ 1,600 கோடியில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் செயல்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக தேசிய சுகாதார ஆணையம் (National Health Authority) இருக்கும்.
தரவு, தகவல் மற்றும் உள்கட்டமைப்புச் சேவைகள், ஆரோக்கியம் தொடர்பான தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு, ரகசியத்தன்மை மற்றும் தனியுரிமை ஆகியவற்றை உறுதி செய்து, வெளிப்படையான, செயல்திறன் மிக்க டிஜிட்டல் சேவைகளை இதன் மூலம் வழங்க முடியும்.
இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள சேவைகளின் எண்ணிக்கை 40 ஆக உள்ளது. 16 அரசு செயல்பாடுகளையும் 24 தனியார் துறை செயல்பாடுகளையும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் பங்குதாரர் சூழலியல் தற்போது தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்
AYUSHMAN BHARAT DIGITAL MISSION IN TAMIL: ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் கீழ், தங்கள் ஆபா (ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்) எண்களை மக்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.
அவர்களின் டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளை அதனுடன் இணைக்கவும் முடியும். சுகாதாரச் சேவை வழங்குநர்களால் மருத்துவ அடிப்படை முடிவுகள் எடுக்கும் திறனை மேம்படுத்துவதற்கும் இது உதவும்.
தொலைமருத்துவம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலமும், சுகாதாரச் சேவைகளை நாடு முழுவதும் எளிதில் பெரும் வசதியைச் செயல்படுத்துவதன் மூலமும் தரமான சுகாதாரப் பாதுகாப்பிற்கான சமமான அணுகலை இந்தப் பணி மேம்படுத்தும்.