THOZHI HOSTEL 2024: தோழி தங்கும் விடுதிகள்

Photo of author

By TNPSC EXAM PORTAL

THOZHI HOSTEL: தோழி தங்கும் விடுதிகள்: தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் “தோழி” என்ற பெயரில் தங்கும் விடுதிகள் அரசின் சார்பில் திறக்கப்பட்டுள்ளன.

வேலை நிமித்தமாக நகரங்களை நோக்கி நகரும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் என்பது மிகவும் அவசியமானது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாட்டில் 9 நகரங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

MANARKENI MOBILE APP: மணற்கேணி மொபைல் ஆப்

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் இந்த ‘தோழி’ விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

24 மணி நேர பாதுகாப்பு வசதி, சிசிடிவி கேமராக்கள், பயோமெட்ரிக் வருகைப்பதிவு, காற்றோட்டமான கட்டடங்கள், சுத்தமான அறைகள், வைஃபை வசதி, கேண்டீன் டிவி ஹால், வாஷிங் மெஷின், துணி அயர்ன் செய்தல், சுத்தமான ஆர்.ஓ. குடிநீர், ஏசி வசதி என ஏராளமான வசதிகள் இருந்தது.

ஒரு நாள், ஒரு வாரம், 15 நாட்கள் அல்லது மாத கணக்கில் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். ஒருவர், இருவர், நான்கு பேர் அல்லது ஆறு பேர் வரை ஒரே அறையை பகிர்ந்து கொள்ளும் முறையும் உள்ளது.

THOZHI HOSTEL – ENGLISH

THOZHI HOSTEL: தோழி தங்கும் விடுதிகள்: All over Tamil Nadu, the Government has opened hostels under the name of “Thozhi” with modern facilities at low cost for working women staying in cities.

Safe shelter is essential for women who move to cities for work. Taking this into consideration, Thozhi Inns have been opened in 9 cities in Tamil Nadu on behalf of Social Welfare and Women Development Department of Tamil Nadu Government.

These ‘Thozhi’ hotels are functioning in Chennai, Chengalpattu, Villupuram, Perambalur, Salem, Thanjavur, Trichy and Tirunelveli districts with modern facilities.

24 Hour Security, CCTV Cameras, Biometric Attendance, Airy Buildings, Clean Rooms, Wi-Fi, Canteen TV Hall, Washing Machine, Ironing, Clean R.O. There were plenty of facilities like drinking water and AC facility.

You can stay for a day, a week, 15 days or a month. One, two, four or six people can share the same room.

error: Content is protected !!