10TH KAMBA RAMAYANAM NOTES FROM NEW SAMACHEER BOOK 2023: 10ஆம் வகுப்பு புதிய சமச்சீர் புத்தகம் – பாலகாண்டம், அயோத்தியா காண்டம், யுத்த காண்டம்: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாலகாண்டம் – ஆற்றுப்படலம்
- 12TH KAMBA RAMAYANAM NOTES FROM NEW SAMACHEER BOOK 2023: ஆறு இயற்கையின் தோற்றமாக இல்லாமல் ஓர் ஓவியமாக விரிகிறது. அதை உயிரெனக் காணும் அந்த அழகுணர்ச்சி கவிதையாகி ஓடி நெஞ்சில் நிறைகிறது
தாதுகு சோலைதோறுஞ் சண்பகக் காடுதோறும்
போதவிழ் பொய்கைதோறும் புது மணற் றடங்கடோறும்
மாதவி வேலிப்பூக வனம்தொறும் வயல்கடோறு
மோதிய வுடம்புதோறு முயிரென வுலாயதன்றே (31)
பாலகாண்டம் – நாட்டுப்படலம்
10TH KAMBA RAMAYANAM NOTES FROM NEW SAMACHEER BOOK 2023: இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன்கவி காட்டுகிறது.
தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க
கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்
வண்டுகளி னிதுபாட மருதம் வீற்றி ருக்கும்மாதோ (35)
பாலகாண்டம் – நாட்டுப்படலம்
10TH KAMBA RAMAYANAM NOTES FROM NEW SAMACHEER BOOK 2023: ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக்கொண்டு, ஒரு நாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி போற்றத்தக்கது.
வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்
திண்மையில்லை நேர்செறுந ரின்மையால்
உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்
வெண்மையில்லை பல்கேள்வி மேவலால் (84)
அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்
10TH KAMBA RAMAYANAM NOTES FROM NEW SAMACHEER BOOK 2023: இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன், மை, மரகதம் என்றெல்லாம் உவமை சொல்லி, நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை ‘ஐயோ’ என்ற சொல்லில் வைப்பதன் வாயிலாக அதை இயன்றதாக்குகிறான்.
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ?
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் (1926)
அயோத்தியா காண்டம் – கங்கை காண் படலம்
10TH KAMBA RAMAYANAM NOTES FROM NEW SAMACHEER BOOK 2023: கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம். பொருள் புரியாவிடினும் சந்த இன்பம் மகிழ்ச்சியூட்டுகிறது. ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’ என்று பாரதி சொல்வதை இதில் உணரமுடியும்.
ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன்” என்று எனை ஏசாரோ? (2317)
யுத்த காண்டம் – கும்பகருணன் வதைப் படலம்
- உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம், இடிக்கும் காட்சியைக் கண்முன் எழுப்புகிறது.
உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெ லாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்! (7316)
பாடலின் பொருள்
- 10TH KAMBA RAMAYANAM NOTES FROM NEW SAMACHEER BOOK 2023: மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் செறிந்த செண்பகக் காடுகள். அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள். புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி, கொடி வேலியுடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது சரயுஆறு. அது, ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கிறது.
- குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட, விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண, நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய. மகர யாழின் தேன் ஒத்த இசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது.
- கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால். கொடைக்கு அங்கே இடமில்லை; நேருக்குநேர் போர் புரிபவர் இல்லாததால், உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை: பொய்மொழி இல்லாமையால், மெய்மை தனித்து விளங்கவில்லை; பல வகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதும் இல்லை.
- பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட, இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும். இளையவன் இலக்குவனொடும் போனான். அவன் நிறம் மையோ? பச்சைநிற மரகதமோ? மறிக்கின்ற நீலக் கடலோ? கார்மேகமோ? ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன்.
- ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றைக் கடந்து செல்வார்களா? யானைகள் கொண்ட சேனையைக்கண்டு. புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்! தோழமை என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா?
- தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா?
- உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!