PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பழமொழி நானூறு
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
- முன்றுறை என்பது ஊர் பெயர்.
- அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
- அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
- முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.
- இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
- பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.
- பழமொழி நானூறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இது நானூறு பாடல்களைக் கொண்டது.
- ஒவ்வொரு பாடலின் இறுதியில் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர் பெற்றது.
- பாவகை = வெண்பா
- இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
- இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும்.
- ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்” என்பது பொருள்
- உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
வேறு பெயர்கள்
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: பழமொழி
- உலக வசனம்
- முதுமொழி
- முதுசொல் (தொல்காப்பியர்)
பெயர்க்காரணம்
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
நூல் பகுப்பு முறை
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34
- பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
- பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)
- பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)
- பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
- பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள்
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: திருக்குறள்
- நாலடியார்
- பழமொழி நானூறு
- தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
- பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே.
மேற்கோள்கள்
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: அணியெல்லாம் ஆடையின் பின்
- கடன் கொண்டும் செய்வார் கடன்
- கற்றலின் கேட்டலே நன்று
- குன்றின்மேல் இட்ட விளக்கு
- தனிமரம் காடாதல் இல்
- திங்களை நாய்க் குரைத் தற்று
- நுணலும் தன் வாயால் கெடும்
சிறந்த தொடர்கள்
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: ஆற்றுணா வேண்டுவது இல்
- கரையாழ அம்மி மிதப்பு
- குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல்
- பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ
இந்நூலின் பிரிவுகள்
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: கல்வி (10)
- கல்லாதார் (6)
- அவையறிதல் (9)
- அறிவுடைமை (8)
- ஒழுக்கம் (9)
- இன்னா செய்யாமை (8)
- வெகுளாமை (9)
- பெரியாரைப் பிழையாமை (5)
- புகழ்தலின் கூறுபாடு (4)
- சான்றோர் இயல்பு (12)
- சான்றோர் செய்கை (9)
- கீழ்மக்கள் இயல்பு (17)
- கீழ்மக்கள் செய்கை (17)
- நட்பின் இயல்பு (10)
- நட்பில் விலக்கு (8)
- பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)
- முயற்சி (13)
- கருமம் முடித்தல் (15)
- மறை பிறர் அறியாமை (6)
- தெரிந்து தெளிதல் (13)
- பொருள் (9)
- பொருளைப் பெறுதல் (8)
- நன்றியில் செல்வம் (14)
- ஊழ் (14)
- அரசியல்பு (17)
- அமைச்சர் (8)
- மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
- பகைத்திறம் தெரிதல் (26)
- படைவீரர் (16)
- இல்வாழ்க்கை (21)
- உறவினர் (9)
- அறம் செய்தல் (15)
- ஈகை (15)
- வீட்டு நெறி (13)
பழமொழி நானூறில் – வரலாற்றுச் செய்திகள்
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: தூங்கும் எயிலும் தொலைத்தலால் (பா.156) (தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனைக் குறித்தது)
- கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (பா.243) (மனு நீதி கண்ட சோழன்)
- தவற்றை நினைதுத்தன் கைக்குறைத்தான் தென்னவனும் (பா.77) (பொற்கைப் பாண்டியன்)
- முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (பா.75) (குறுநில வள்ளல் பாரி மற்றும் பேகன்)
- பாரி மடமகள் பாண்மகற்கு….. நல்கினாள்(பா.382) (பாரியின் மகள்)
- நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (பா.7) (கரிகால் சோழன்)
- சுடப்பட்டுயிர் உய்ந்த சோழன் மகனும் (பா.240) (தீயினால் கொளுத்தப்பட்டும் அதிலிருந்து பிழைத்த இளம்சேட்சென்னி சோழன் மகனாகிய கரிகால் சோழன்)
- அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (பா.381) (தம் புகழைப் பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன்)
பழமொழி நானூறில் வரும் புராணக் குறிப்புகள்
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து (பா.258) – இராமாயணம்
- அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் (பா.235) – பாரதம்
- பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா (பா.357) – பாரதம்
- ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன் [பா.184] – மாவலி
- உலகந்தாவிய அண்ணலே (பா.178) – உலகம் அளந்த வாமானன்
விருந்தோம்பல் – முன்றுறை அரையனார்
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண் மகற்கு – நீர் உலையுள்
பொன் திறந்து கொண்டு பிறாவா நல்கினாள்
ஒன்றாக முன்றில் இல்
சொல்லும் பொருளும்
- மாரி – மழை
- மடமகள் – இளமகள்
- வறந்திருந்த – வறண்டிருந்த
- நல்கினாள் – கொடுத்தாள்
- பிறவா – உணவாக
- முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை), இங்கு வீட்டைக் குறிக்கிறது
பாடலின் பொருள்
- PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: மழையின்றி வறட்சி நிலவும் காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இறந்து நின்றனர்.
- பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.
- அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
- இப்பாடல் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றாகும் முன்னிலை என்று என்பதாகும்.
- ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.