Madras High Court – Office Assistant Exam Questions and Answers 2021
Tamil Nadu High Court OA Exam
Exam held on : 31- 07-2021
Total Questions: 50 Questions
Time: 60 minutes
பகுதி – அ
1. தமிழ்நாட்டில் தற்போது எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது?
A)35
B)36
C)37
D)38
Answer: D
2. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?
A)ஏ.பி.சஹி
B)சஞ்சிப் பானர்ஜி
C)இந்திரா பானர்ஜி
D)தஹில்ரமணி
Answer: B
3. எத்தனை மாதங்களில் 28 நாட்கள் இருக்கிறது?
A)12
B)1
C)10
D)மேற்கண்ட எதுவுமில்லை
Answer: B
4. மனிதன் வாழ தேவையான வாயு?
A) ஹைட்ரஜன்
B) நைட்ரஜன்
C) ஆக்ஸிஜன்
D) கார்பன் டை ஆக்சைடு
Answer: C
5. உலகின் மிகப்பெரிய பீடபூமி எது?
A) தக்காண பீடபூமி
B) எவரெஸ்ட் பீடபூமி
C) திபெத்திய பீடபூமி
D) மேற்கண்ட எதுவுமில்லை
Answer: C
6. கீழ்கண்ட வரிசையில் கடைசியில் வரும் எண் எது?
108, 117, 126, 135, ?
A) 99
B) 144
C) 153
D) 162
Answer: B
7. ஈபில் டவர் எந்த நாட்டில் இருக்கிறது?
A) பிரான்ஸ்
B) ஜெர்மனி
C) ஸ்வீடன்
D) ரஷ்யா
Answer: A
8. இந்திய குடியரசு தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
A) 4
B) 5
C) 6
D) 7
Answer: B
9. இந்தியாவின் கோதுமை களஞ்சியம்?
A) ஹரியானா
B) பஞ்சாப்
C) உத்திரப் பிரதேசம்
D) ஜார்கண்ட்
Answer: B
10. தமிழகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது?
A) நாகப்பட்டினம்
B) ராமேஸ்வரம்
C) தூத்துக்குடி
D) சென்னை
Answer: C
11. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்?
A) திருச்சி
B) திருநெல்வேலி
C) கோயம்புத்தூர்
D) சென்னை
Answer: C
12. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் ஊர்?
A) திருப்பூர்
B) சிவகாசி
C) ராமேஸ்வரம்
D) மதுரை
Answer: B
13. இந்தியா எப்போது குடியரசு நாடானது?
A) 1947
B) 1948
C) 1950
D) 1956
Answer: C
14. தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே எந்த நதி சம்பந்தமாக பிரச்சனை இருக்கிறது ?
A) தாமிரபரணி
B) பாலாறு
C) காவிரி
D) தென்பெண்ணை
Answer: C
15. ஈரப்பதத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்கும் மண்?
A) செம்மண்
B) வண்டல்மண்
C) கரிசல்மண்
D) சரளை மண்
Answer: C
16. உலகின் மிகப்பெரிய கண்டம்?
A) ஆப்ரிக்கா
B) அமெரிக்கா
C) ஐரோப்பா
D) ஆசியா
Answer: D
17. மின் விளக்கை கண்டுபிடித்தவர்?
A) தாமஸ் ஆல்வா எடிசன்
B) ராபர்ட்
C) நியூட்டன்
D) மால்தஸ்
Answer: A
18. நரிமணத்தின் புகழுக்கு காரணம்?
A) பெட்ரோலியம்
B) தங்கம்
C) வைரம்
D) நிலக்கரி
Answer: A
19. மணிமுத்தாறு அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது ?
A) காவிரி
B) கோதாவரி
C) வைகை
D) தாமிரபரணி
Answer: D
20. ஒரு கிலோ மாம்பழம் ரூபாய் 60. ஒரு கிலோ திராட்சை ரூபாய் 88. ஒரு கிலோ சாத்துக்குடி ரூபாய் 34. ஒரு நபர் 4 கிலோ மாம்பழம், 6 கிலோ திராட்சை, 7 கிலோ சாத்துக்குடி வாங்கிக்கொண்டு கடைக்காரரிடம் ரூபாய் 2, 000 கொடுக்கிறார். கடைக்காரர் கொடுக்க வேண்டிய மீதி தொகை எவ்வளவு?
A) 990
B) 850
C) 854
D) 994
Answer: D
21. 5 லிட்டர் + 60 மில்லி லிட்டர்?
A) 560 மில்லி லிட்டர்
B) 5600 மில்லி லிட்டர்
C) 5060 மில்லி லிட்டர்
D) 50060 மில்லி லிட்டர்
Answer: C
22. ஒரு பெஞ்சில் 6 மாணவர்களை உட்கார வைக்கலாம். 210 மாணவர்களை உட்கார வைக்க எத்தனை பெஞ்சுகள் தேவைப்படும்?
A) 80
B) 35
C) 25
D) 30
Answer: B
23. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A) 2
B) 1
C) 7
D) 3
Answer: A
24. நம் தேசியக் கொடியில் உள்ள சக்கரத்தில் எத்தனை கோடுகள் இருக்கிறது?
A) 48
B) 24
C) 28
D) 36
Answer: B
25. நமது தேசிய பாடலை எழுதியவர் யார்?
A) ரவீந்திரநாத் தாகூர்
B) பக்கிம் சந்திர சட்டர்ஜி
C) மோனாலிசா
D) லஜபதிராய்
Answer: B
26. தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?
A) திருநெல்வேலி
B) ஈரோடு
C) கிணத்துக்கடவு
D) தஞ்சாவூர்
Answer: D
27. பொருத்துக:
a) தொலைபேசி – 1.ரைட் சகோதரர்கள்
b) ரேடியோ – 2.பெயிர்ட்
c) விமானம் – 3.கிரகாம்பெல்
d) தொலைக்காட்சி – 4.மார்கோனி
(a) (b) (c) (d)
A) 1 2 3 4
B) 4 3 2 1
C) 3 4 2 1
D) 3 4 1 2
Answer: D
28. கீழ்கண்ட சூழலில் எந்த கூற்று மிகச் சரியானது ?
உன் நண்பர் பிறர் பையில் இருந்து ஏதோ ஒரு பொருளை எடுப்பதை பார்த்து விட்டாய்.
A) என் நண்பர் ஆகையால் யாரிடமும் காட்டிக் கொடுக்க மாட்டேன். எனக்கு தெரிந்ததாகவும் காட்டிக்கொள்ள மாட்டேன்.
B) பிறர் பொருளை எடுத்தது தவறு. அதனால் நண்பராக இருந்தாலும் ஆசிரியரிடம் கூறுவேன்.
C) ஆசிரியரிடம் கூறி விடுவேன் என மிரட்டி திருத்துவேன்.
D) நண்பர் ஏன் அப்பொருள் எடுத்தார் என்பது பற்றியும் பிறர் பொருளை எடுப்பது தவறு என்பது குறித்தும் நண்பரிடம் பேசுவேன்.
Answer: D
29. ரவி என்ற சிறுவன் தன் வீட்டிலுள்ள மாதுளை மரத்தில் உள்ள பெரும்பாலான பூக்களை பறித்து விட்டான். அதனால்
A) அந்த மரம் வளர்வது குறையும்
B) மாதுளை பழங்கள் குறையும்
C) இலைகள் உதிரும்
D) மேற்கண்ட எதுவுமில்லை
Answer: B
30. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?
A) மலேசியா
B) சிங்கப்பூர்
C) தஞ்சாவூர்
D) கோயம்புத்தூர்
Answer: A
பகுதி – ஆ
31. மணிமேகலை உணர்த்தும் சமயம்
A) இந்து மதம்
B) பௌத்த மதம்
C) பார்சி மதம்
D) கிறித்துவ மதம்
Answer: B
32. ஏற்றத்தாழ்வற்ற – – – – – – அமைய வேண்டும்.
A) சமுதாயம்
B) நாடு
C) வீடு
D) தெரு
Answer: A
33. மயிலுக்கு போர்வை தந்த மன்னன்?
A) பேகன்
B) நம்பி
C) பாரி
D) மேற்கண்ட எவருமில்லை
Answer: A
34. இந்தியா என்ற இதழைத் தொடங்கியவர் யார் ?
A) கண்ணதாசன்
B) பாரதியார்
C) விஸ்வநாதன்
D) மறைமலைஅடிகள்
Answer: B
35. பாரதிதாசனுக்கு அவர் பெற்றோர் இட்ட பெயர்?
A) கனக சுப்புரத்தினம்
B) மணிரத்தினம்
C) கலை ரத்தினம்
D) பால ரத்தினம்
Answer: A
36.தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர்?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) சுப்புரத்தினம்
D) சுந்தரம்பிள்ளை
Answer: D
37. ‘கட்டவிழ்த்து’ பிரித்து எழுதுக.
A) கட்ட + விழ்த்து
B) கட்டு + அவிழ்த்து
C) கட்ட + அவிழ்த்து
D) கட்டவி+ ழ்த்து
Answer: B
38. குதிரை வளர்க்கும் இடத்தை – – – – – – – – என்று அழைப்பார்கள்.
A) குதிரை தொழுவம்
B) குதிரை பட்டி
C) குதிரை வளை
D) குதிரை கொட்டில்
Answer: D
39. ஆந்தை
A) அலறும்
B) கத்தும்
C) ஊளையிடும்
D) கூவும்
Answer: A
40.நோயற்ற வாழ்வே
A) முகத்தில் தெரியும்
B) நூறுவயது
C) குறைவற்ற செல்வம்
D) வழியில் பயமில்லை
Answer: C
41. பொருத்துக:
(a) வாழை – 1.தோப்பு
(b) நெல் – 2. கொள்ளை
(c) சோளம் – 3.தோட்டம்
(d) கொய்யா – 4.வயல்
(a) (b) (c) (d)
A) 3 4 2 1
B) 1 4 2 3
C) 4 3 2 1
D) 1 2 3 4
Answer: A
42.கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
1. திராட்சை கொத்து கொத்தாய் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன.
2. அமுதா பூந்தோட்டம் பூக்களை பறித்தாள்.
3. மக்கள் மந்தை மந்தையாக சென்றனர்.
(A) அனைத்து கூற்றுகளும் தவறானது
(B) கூற்றுகள் 1 மற்றும் 3 மட்டும் சரியானது
(C) கூற்றுகள் 2 மற்றும் 3 மட்டும் சரியானது
(D) அனைத்து கூற்றும் சரியானது
Answer: B
43. நெல் + கதிர் என்பதை சேர்த்து எழுதுக
(A) நெல்கதிர்
(B) நெற்கதிர்
(C) நெல்க்கதிர்
(D) நெற்க்கதிர்
Answer: B
44. முதுமை + உரை என்பதை சேர்த்து எழுத கிடைப்பது
(A) மூதுரை
(B) முதுமை உரை
(C) முதுமையுரை
(D) மேற்கண்ட எதுவுமில்லை
Answer: A
45. இந்தியாவின் தேசிய மரம் எது?
(A) வாழை மரம்
(B) ஆல மரம்
(C) தென்னை மரம்
(D) தேக்கு மரம்
Answer: B
46.உலகப் பொதுமறை
(A) சிலப்பதிகாரம்
(B) திருக்குறள்
(C) பைபிள்
(D) பகவத்கீதை
Answer: B
47. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மாநிலங்கள்
(A) கேரளா, கர்நாடகா, ஆந்திரா
(B) கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா
(C) பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா
(D) கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, தெலுங்கானா
Answer: A
48.தெனாலிராமன் எந்த அரசரின் அரசவையில் இருந்தார் ?
(A) கிருஷ்ணதேவராயர்
(B) சந்திரகுப்தர்
(C) புலிகேசி
(D) அக்பர்
Answer: A
49. தமிழ்நாட்டில் தற்போது அகழ்வாராய்ச்சி நடக்கும் இடம் எது?
(A) வேதாரண்யம்
(B) மேலூர்
(C) தரங்கம்பாடி
(D) கீழடி
Answer: D
50.தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி எது?
(A) கல்வரையான் மலை
(B) ஏற்காடு
(C) ஊட்டி
(D) யானை மலை
Answer: C