14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.
எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.
அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.
14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.
எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம். எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.
எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
TAMIL
- மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால் வரும் 25-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது.
- இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்நிலை தேர்வுக்குழு கூட்டம் காலையில் நடைபெற்றது.
- இதில், கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், மத்திய பிரதேச ஐபிஎஸ் அதிகாரி சுதிர் சக்சேனா மற்றும் பஞ்சாப் ஐபிஎஸ் அதிகாரி தின்கர் குப்தா ஆகிய 3 மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
- இதில் இப்போது கர்நாடக மாநில காவல் துறை தலைவராக (டிஜிபி) உள்ள பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நியமிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
- இதையடுத்து, இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் நேற்று மாலை பிறப்பித்தது. இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.
- ஐஐடி-டெல்லி பட்டதாரியான பிரவீன் சூட், 1986-ல் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள இவர்மிகவும் திறமையாக செயல்பட்டுள்ளார்.
- குறிப்பாக, 2004 முதல் 2007 வரையில் மைசூரு மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய இவர், பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் கடந்த 2018 முதல் கர்நாடக டிஜிபியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: கடற்படை பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலில் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது.
- ஏவுகணைகளை வீசும்திறன் வாய்ந்த ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலும், பிரம்மோஸ்ஏவுகணையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
- இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணையை தற்போது நிலப் பகுதியிலிருந்தும், விமானத்திலிருந்தும், கப்பலில் இருந்தும், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும்.
- 14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: உலகிலேயே அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தின் 8,848.86 மீட்டர் உயர உச்சியை அடைந்தவர் என்ற சாதனையை நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டியான, 52 வயது, கமி ரீடா ஷெர்பா படைத்திருந்தார்.
- அவர் 26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, தமது முந்தைய சாதனையை முறியடித்திருந்தார்.
- இந்நிலையில், பசங் தவா ஷெர்பா 26வது முறையாக, 8,849 மீட்டர் உயர உச்சியை அடைந்து, நேபாள வழிகாட்டி கமி ரீடாவின் சாதனையை சமன் செய்துள்ளார். இவர் ஹங்கேரியை சேர்ந்த மலையேறும் வீரருடன் சேர்ந்து எவரெஸ்ட் உச்சியை அடைந்தார்.
- இதற்கிடையே கமி ரீடா தனது 27வது பயணத்துக்காக எவரெஸ்ட் அடிவாரத்தில் முகாமிட்டுள்ளார். இந்த வாரத்தில் மட்டும் 5 வெளிநாட்டினர் உள்பட 19 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் உச்சியை தொட்டுள்ளனர்.
- 14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் கவரட்டி, மே 14-19 வரை இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சியான சமுத்ரா சக்தி-23 இன் 4வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவின் படாமிற்கு வந்தடைந்தது.
- இந்திய கடற்படையின் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானம் மற்றும் சேடக் ஹெலிகாப்டர் ஆகியவையும் இதில் பங்கேற்கின்றன.
- இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கேஆர்ஐ சுல்தான் இஸ்கந்தர் முடா, சிஎன் 235 கடல்சார் ரோந்து விமானம் மற்றும் பாந்தர் ஹெலிகாப்டர் ஆகியவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
- சமுத்திர சக்தி பயிற்சியானது இரு கடற்படைகளுக்கும் இடையே இயங்கக்கூடிய தன்மை, கூட்டு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தொழில்முறை தொடர்புகள், நிபுணத்துவ பரிமாற்றங்கள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் ஆகியவை பயிற்சியில் அடங்கும். கடல் பயிற்சியின் போது, ஆயுதம் வீசுதல், ஹெலிகாப்டர் செயல்பாடுகள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர், வான் பாதுகாப்பு பயிற்சிகள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
- 14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பாதுகாப்புத் துறையில் ‘‘தற்சார்பு இந்தியா’’வை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கும், ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட 4வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த சாதனங்களின் விவரங்கள் ஸ்ரீஜன் இணையப்பாக்கத்தில் (https://srijandefence.gov.in/) கிடைக்கின்றன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகே இவை இந்தியத் தொழில்துறையிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.
- இந்த நான்காவது உள்நாட்டு மயமாக்கல் பட்டியல் (பிஐஎல்) மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் தொடர்பாக 2021 டிசம்பர், 2022 மார்ச், 2022 ஆகஸ்ட் என ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல்களின் தொடர்ச்சியாகும்.
- ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் 2,500 சாதனங்கள் உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன. மேலும் 1,238 (351+107+780) சாதனங்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உள்நாட்டுமயம் ஆக்கப்படவுள்ளன.
- இவற்றில் 310 சாதனங்கள் (1வது பிஐஎல் – 262, 2வது பிஐஎல் – 11, 3வது பிஐஎல் – 37) இதுவரை உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன.
- 14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: நியூ லைப் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் தேஜஸ்வின் சங்கர் 24, பங்கேற்றார். இவர், 2018ல் அமெரிக்க தொடரில் 2.29 மீ., தாண்டி தேசிய சாதனை படைத்திருந்தார்.
- கடந்த 2022 காமன்வெல்த்தில் (பர்மிங்காம்) வெண்கலம் வென்ற தேஜஸ்வின் சங்கர், இம்முறை 2.21 மீ., தாண்டி, இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- 2007, உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பஹாமஸ் வீரர் டொனால்டு தாமஸ் 38, இம்முறை 2.26 மீ., உயரம் தாண்ட, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ஜமைக்கா வீரர் லுஷேன் வில்சன் (2.21 மீ.,) இரண்டாவது இடத்தை சங்கருடன் பகிர்ந்து கொண்டார்.
வரலாற்றில் இன்றைய நாள்
மே 14 – அன்னையர் தினம் 2023 (மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு) / MOTHER’S DAY 2023
ENGLISH
- Central Bureau of Investigation (CBI) Director Subodh Kumar Jaiswal is set to retire on the 25th. Subsequently, the central government started the procedures for appointing a new director.
- According to this, Prime Minister Narendra Modi, Chief Justice T.Y. In this, the names of 3 senior officers namely Karnataka DGP Praveen Chute, Madhya Pradesh IPS officer Sudhir Saxena and Punjab IPS officer Thinkar Gupta were considered.
- It was unanimously decided to appoint Praveen Chute, who is now the Karnataka State Director General of Police (DGP), as the new CBI Director. Accordingly, the Union Ministry of Personnel and Training issued an order to this effect yesterday evening. He will hold office for the next 2 years.
- An IIT-Delhi graduate, Praveen Chute joined the IPS in 1986. He has held various high positions and is very efficient. In particular, he served as the Commissioner of Police in Mysuru from 2004 to 2007 and played an important role in the arrest of a Pakistani terrorist. It is to be noted that he has been serving as Karnataka DGP since 2018.
- 14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The BrahMos supersonic missile, developed for naval use, was test-launched from INS Marmagova. A BrahMos missile fired from the ship hit the target accurately. The missile-launching ship INS Marmagova and the BrahMos missile are indigenously manufactured.
- The India-Russia joint venture BrahMos missile can now be launched from land, aircraft, ships and submarines.
- 14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Kami Reeda Sherpa, 52, a guide from Nepal, holds the record for the highest summit of Mount Everest at 8,848.86 meters in the world. He reached the summit of Everest for the 26th time, breaking his previous record.
- In this case, Pasang Dawa Sherpa reached the 8,849-meter peak for the 26th time, equaling Nepalese guide Kami Reeda’s record. He reached the top of Everest along with a mountaineer from Hungary.
- Meanwhile Kami Reeda is camping at the base of Everest for her 27th expedition. This week alone, 19 mountaineers, including 5 foreigners, have reached the world’s highest peak, Mount Everest.
- 14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The indigenously built INS Kavarati arrived in Indonesia to participate in the 4th edition of the India-Indonesia bilateral exercise Samudra Shakti-23 from May 14-19. Indian Navy’s Tornier maritime patrol aircraft and Chetak helicopters are participating in it.
- Also represented are KRI Sultan Iskandar Muda, CN 235 maritime patrol aircraft and Panther helicopter from the Indonesian Navy. The maritime exercise aims to enhance interoperability, joint and mutual cooperation between the two navies.
- Training includes professional interactions, professional exchanges and sports equipment. During the sea exercise, weapon launch, helicopter operations, anti-submarine warfare and air defense exercises will be carried out.
- 14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: To promote ‘Self-Reliance India’ in defense sector and reduce imports of defense PSUs, Rs. The Ministry of Defense has approved the 4th constructive indigenization list of 928 immediate equipments/sub-systems/spare parts of military importance with import subsidy worth Rs 715 crore. Details of these devices are available on Srijan website (https://srijandefence.gov.in/). These will be procured from Indian industry only after the deadline mentioned in the list.
- This fourth Indigenization List (PIL) is a continuation of the three lists already published in December 2021, March 2022, August 2022 regarding replacement equipment/subsystems/spare parts.
- 2,500 devices have been domesticated in the already published lists. A further 1,238 (351+107+780) devices will be domesticated within the specified time frame. Out of these 310 devices (1st PIL – 262, 2nd PIL – 11, 3rd PIL – 37) have been indigenized so far.
- 14th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: New Life International Athletics Championship was held. India’s Tejaswin Shankar, 24, participated in the men’s high jump event. He had set a national record by clearing 2.29m in the American series in 2018.
- Tejaswin Shankar, who won bronze in last 2022 Commonwealth (Birmingham), jumped 2.21m this time and took second place and won the silver medal. Bahamas player Donald Thomas 38, who won gold in the 2007 World Championship, this time jumped 2.26m and won the gold medal. Jamaican Lushan Wilson (2.21m) shared the second spot with Shankar.