டிப்ளமோவில் (Diploma) எந்த கோர்ஸ் (Course) படித்தால் 35 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை வாங்க முடியும்?
டிப்ளமோ படித்தால் கிடைக்கும் அரசு வேலையை பற்றி பார்ப்பதற்கு முன்னர் டிப்ளமோவில் என்னென்ன படிப்புகள் உள்ளது என்பதை பற்றி நாம் முதலில் பார்ப்போம்.
Polytechnic Courses List:
Diploma in Mechanical Engineering – DME
Diploma in Civil Engineering – DCE
Diploma in Electrical and Electronics Engineering – DEEE
Diploma in Electronics and Communication Engineering – DECE
Diploma in Computer Science Engineering – DCSE
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது குறைந்தது 35 ஆயிரம் சம்பளத்தில் கிடைக்ககூடிய மத்திய மற்றும் மாநில அரசு வேலைகள் :
Jobs for Diploma holders
Mechanical diploma jobs:
- டிஎன்பிஎஸ்சி நடத்தும் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு- 2) பணியிடங்களுக்கு வருடம் தோறும் தேர்வு நடத்தப்படுகிறது.
- டிப்ளமோ மெக்கானிக்கல் படித்திருந்தால் 35 ஆயிரம் சம்பளத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்விற்கான அடிப்படைத் தகுதிகள்:
- கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- கனரக வாகன பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் டிப்ளமோ படிப்பு படித்திருந்தால் போதும்.
Apply:
- நேரடியாக மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியில் சேருபவர்கள் தான் பிறகு மண்டலப் போக்குவரத்து அதிகாரியாக (ஆர்.டி.ஓ.) பதவி உயர்வு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
RRB JE - Junior Engineer
மத்திய அரசின் இந்த ரயில்வே வேலையை அப்ளை செய்வதற்கு டிப்ளமோ மெக்கானிக்கல் படித்திருந்தால் போதுமானது.
Apply:
இந்த வேலையும் 35 ஆயிரம் சம்பளம் தரக்கூடிய வேலையாகும்.
Civil Diploma Jobs:
டிப்ளமோ சிவில் படித்திருந்தால் 35 ஆயிரம் சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer, PWD ஆகிய பணியிடங்களுக்கு அரசு வேலை உள்ளது.
Apply:
ECE Diploma Jobs:
ECE டிப்ளமோ மட்டுமே படித்தால் போதும் TN Police SI (Technical SI) தேர்விற்கு அப்ளை செய்ய முடியும்.
36,000 சம்பளத்துடன் கூடிய டெக்னிக்கல் சப் இன்ஸ்பெக்டர் வேலை.
Apply:
Read Also,
raja raja cholan history in tamil